வழி தெரியாமல் திணறும் ஐயப்ப பக்தர்கள் : கேரளாவிற்குள் சிக்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2021 03:12
கம்பம்: சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கம்பத்தில் இருந்து கம்பமெட்டு வழியாகச் செல்லும்போது, கேரளாவிற்குள் சரியான பாதையில் செல்வதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த பக்தர்கள் , இந்தாண்டு அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றனர். கடந்த சில வாரங்களாக அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் கம்பம் வழியாக ஐயப்பன் கோவிலுக்குச் செல்கிறது. வழக்கம்போல நேற்று முன்தினம் முதல் கம்பம்மெட்டு ரோட்டில் வாகனங்கள் ஒரு வழிப்பாதையாக திருப்பி விடப்பட்டுள்ளது கம்பம்மெட்டு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கேரளாவிற்குள் வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். கம்பமெட்டு, ஆமையாறு, புளிய மலை ,கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம் வழியாக செல்ல வேண்டும். கம்பமெட்டில் நுழைந்தவுடன்- சபரிமலை பக்தர்கள் பலர் ஆமையாறு ரோட்டிற்கு பதில் அன்னியார் தொழு ரோட்டில் சென்று விடுகின்றனர். அன்னியார் தொழு நோட்டில் பல பாதைகள் இருப்பதால் புளியமலையை அடைய முடியாமல் திணறுகின்றனர். பலர் ஆமையாறுக்கு சென்றவுடன், புளியன் மலை ரோட்டில் செல்லாமல், நேரே செல்லும் ரோட்டில் சென்று குமுளிக்கு சென்று விடுகின்றனர். எனவே சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கம்பமெட்டிலிருந்து எருமேலியை அடையும் பாதையை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்க தேனி எஸ்.பி. பிரவின் உமேஷ் டோங்ரே நடவடிக்கை எடுக்க வேண்டும்.