பதிவு செய்த நாள்
13
பிப்
2022
10:02
உத்திரம் 2, 3, 4 பாதம்
முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்து விடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர், நண்பர்களின் பங்களிப்பு இருக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனையை பின்பற்றுவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொலை துாரத்தில் இருந்து சுப செய்திகள் வந்து சேரும். வருமானம் பலவழிகளில் வர வாய்ப்புண்டு. பொருளாதாரம் சேமிக்கும் விதத்தில் இருக்கும். அரசு, தனியார்துறை பணியாளர்கள் மந்தநிலையில் இருந்து விடுபடுவர். திட்டமிட்டு செயல்பட்டு பணிகளை விரைந்து முடிப்பர். தொழிலதிபர்கள் நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பணிபுரியும் பெண்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெறுவர். சிலர் வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித் தருவர். கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையும். பயனுள்ள வகையில் பொழுதுபோக்குவர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 6
அதிர்ஷ்ட நாள்: பிப். 16, 17
பரிகாரம் : நரசிம்மர் கோயிலுக்குச் சென்று 12 முறை வலம் வரவும்.
அஸ்தம்: எல்லாச் செயல்களிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். நினைத்தது நிறைவேறும் சூழ்நிலை அமையும். சுபவிஷயத்தில் தடை குறுக்கிட்டாலும் நன்மையில் முடியும். பெற்றோரின் உடல்நலனில் அக்கறை தேவை. பணவரவு திருப்தி தரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் மறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். அரசாங்க ரீதியில் இருந்த தேக்க நிலை மாறும். தொழிலதிபர்கள் சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி, பொறுப்புகள் ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபநிகழ்ச்சி கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பர். அரசியல்வாதிகள் திருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவர். மாணவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண்பர். அன்றாடம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 7
அதிர்ஷ்ட நாள்: பிப்.17, 18
பரிகாரம் : மாரியம்மன் வழிபாட்டால் வெற்றி கிடைக்கும்.
சித்திரை 1, 2 பாதம்
இந்த மாதம் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். இனிய பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுப்பீர்கள். எதிர்பாராத பணவரவால் மனம் மகிழ்வீர்கள். உடல்நிலை சீராக இருக்கும். மனதிலும் துணிச்சல் மேலோங்கும். தடைபட்ட விஷயங்கள் மளமள என நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தாய்வீட்டினரின் அன்பும், ஆதரவும் பெருகும். விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வர். கலைத் துறையினருக்கு ஒப்பந்தம் மூலம் ஆதாயம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தலைமையின் ஆதரவுடன் சிலர் பதவி வாய்ப்பை பெறுவர். மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பர். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 8
அதிர்ஷ்ட நாள்: பிப்.18,19
பரிகாரம்: பிரதோஷ வேளையில் நந்தீஸ்வரரை வழிபடுங்கள்.