புனர்பூசம் - 4: சொல்லாற்றலும் செயலாற்றலும் பெற்ற உங்களுக்கு இந்த மாதம் பணவரவு இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். குழப்பமான காரியங்களில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். பணியாளர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். அரசியல் துறையினருக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. பரிகாரம்: பெருமாளை வழிபட அமைதி உண்டாகும். சந்திராஷ்டமம்: அக். 5, 6 அதிர்ஷ்ட நாள்: செப். 30
பூசம்: கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும் திறனும் உடைய உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்க்கும் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். சுக்கிரன் சஞ்சாரம் பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். குரு பார்வை சுபச்செலவுகள் அதிகரிக்கச் செய்யும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும். பணியாளர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் பிரச்னைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்தி கூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். பரிகாரம்: துர்கை வழிபாட்டால் எதிர்ப்பு அகலும். சந்திராஷ்டமம்: அக். 6, 7 அதிர்ஷ்ட நாள்: அக். 1
ஆயில்யம்: எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடும் உங்களுக்கு இந்த மாதம் நட்சத்திரநாதன் புதன் சஞ்சாரத்தால் பணவரவு கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சனி சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். பணியாளர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரவு கூடும். கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலை களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பரிகாரம்: சிவனை வழிபட பணவரவு கூடும். சந்திராஷ்டமம்: அக். 07, 08 அதிர்ஷ்ட நாள்: அக். 01
மேலும்
பங்குனி ராசி பலன் (15.3.2025 முதல் 13.4.2025 வரை) »