Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : ஐப்பசி மாத பலன் மிதுனம் : கார்த்திகை மாத பலன் மிதுனம் : கார்த்திகை மாத பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
ரிஷபம் : கார்த்திகை மாத பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷபம் : கார்த்திகை மாத பலன்

பதிவு செய்த நாள்

16 நவ
2022
08:11

கார்த்திகை - 2,3,4:
சமயோசிதமாக செயல்படும் திறமை உடைய உங்களுக்கு இந்த மாதம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை  உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரவு கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில்  உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். பணியாளர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல்  உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில்  சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனப் பயணத்தின் போதும், அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை.  பெண்கள் திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவர். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் குறையும். அரசியல்துறையினருக்கு பணவரவு கூடும்.  மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: பைரவருக்கு தீபம் ஏற்ற நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: நவ. 24, 25
அதிர்ஷ்ட நாள்: டிச.4

ரோகிணி:
உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடைய உங்களுக்கு இந்த மாதம் நீண்ட நாளாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக  வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவர். பணவரவு அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும், உற்சாகமும்  தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே  வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.  கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம்  அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள்  மீண்டும் கணவருடன் ஒன்று சேருவர். கலைத்துறையினருக்கு கடன்  பிரச்னை தீரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாள் பிரச்னை தீரும். மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: நவ. 25, 26
அதிர்ஷ்ட நாள்: டிச. 5

மிருகசீரிடம் - 1, 2:
சிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் உடைய உங்களுக்கு இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்னைகளில்  தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரவு எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்னை தீரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத  குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்னைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். பணியாளர்கள் மிகவும் கவனமாக தங்களது  வேலைகளை செய்வது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை  காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம்  உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. கலைத்துறையினர் சில அத்யாவசிய தேவைகளுக்கும் பணப்பற்றாக்குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்னை முடிந்ததும்  இன்னொரு பிரச்னை உருவாகலாம். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம்  செலுத்துவது நல்லது. சகமாணவர், நண்பர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டால் மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டமம்:நவ. 26, 27
அதிர்ஷ்ட நாள்: டிச. 6

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar