சபரிமலை பெருவழிப் பாதையில் முதன்முறையாக மின்விளக்கு வசதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2022 02:12
சபரிமலை,-சபரிமலை பெருவழிப்பாதையில் முதன் முறையாக மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் நான்காம் கட்ட போலீசார் நேற்று பொறுப்பேற்றனர்.
மண்டல காலம் தொடங்கி 32 நாட்கள் கடந்த நிலையில் நேற்று நான்காம் கட்ட போலீஸ் குழு தலா ஒரு எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. ஒன்பது டி.எஸ்.பி., 33 இன்ஸ்பெக்டர்கள், 93 எஸ்.ஐ., 1200 போலீஸ் என 1335 போலீசார் பொறுப்பேற்றனர். மண்டல பூஜை நெருங்கியுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அனைத்து பக்தர்களுக்கும் நல்ல தரிசனம் கிடைக்க போலீசார் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சபரிமலையை சுத்தமாக பராமரிக்க தினமும் புண்ணியம் பூங்காவனம் நிகழ்ச்சியில் போலீசார் பங்கேற்க வேணடும் என்றும் எஸ்.பி., ஆனந்த், வேண்டுகோள் விடுத்தார். பெரு வழிபாதையின் வலியானவட்டம், சிறியான வட்டம் ஆகிய இடங்களில் முதன் முறையாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சீசனில் மின்வாரியம் பம்பை சன்னிதானம் மற்றும் பம்பையில் நான்காயிரம் மின் விளக்குகள் அமைத்துள்ளது. இதில் பெரும்பாலானவை எல்.இ.டி. விளக்குகள். 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் மூன்று எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கான வசதியுடன் சார்ஜிங் மையமும் தொடங்கப்பட்டுள்ளது. இலவுங்கல்லிலும் இதுபோன்ற வசதி செய்யப்பட்டுள்ளது.