நாளை காரடையான் நோன்பு : சுமங்கலி பாக்கியம், கணவனின் நீண்ட ஆயுளுக்கு எளிய வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2023 12:03
கயிறு கட்ட நல்ல நேரம்: .அதிகாலை 5.15 முதல் 5.45 மணி
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்வது காரடையான் நோன்பு. சாவித்திரியை வழிபடுவதால் இதற்கு ‘சாவித்திரி விரதம்’ என்றும் பெயருண்டு. இந்த நாளில் தான் எமதர்மனின் பிடியில் இருந்து கணவர் சத்தியவானை மீட்டாள் சாவித்திரி. இதனடிப்படையில் சுமங்கலிகள் தாலி பாக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதமிருப்பர்.
விரதமிருக்கும் முறை: பெண்கள் சுமங்கலி்யாக வாழ கணவர் அல்லது மூத்த சுமங்கலிகள் மூலம் பூவால் சுற்றப்பட்ட மஞ்சள் சரட்டை கழுத்தில் அணிந்து கொள்வர். மணமாகாத பெண்கள் சரடு கட்டினால் திருமண வாழ்க்கை அமையும். விரதமிருக்கும் பெண்கள் அரிசி மாவுடன் காராமணி சேர்த்து அடையோடு இனிப்பு, உப்பு அடைகள் செய்வர். உருகாத வெண்ணெய்யை படைத்து வழிபடுவர். பசுக்களுக்கு இதை சாப்பிடக் கொடுப்பது அவசியம். அப்போதுதான் நோன்பு முழுமை பெறும். விரதம் மேற்கொள்ளும் வழக்கம் இல்லாதவர்கள் கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டபின் மஞ்சள் சரடு கட்டலாம்.
கயிறு கட்டும் போது சொல்லும் மந்திரம் தோரம் கிருஷ்ணாமி சுபகே! ஸஹாரித்ரம் தராமி அஹம்! பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்! ஸூப்ரீதா பவ ஸர்வதா!