பதிவு செய்த நாள்
09
அக்
2012
04:10
மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவம் தரும் தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு தர்மகர்ம ஸ்தான அதிபதிகளான சூரியன், புதன் ஆதாய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சனியுடன் அனுகூலமாக உள்ளனர். கேதுவும் இந்த மாதம் தன்பங்கிற்கு நல்ல பலன் வழங்குவார். உடல்நலம் பலம்பெறும். மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய திட்டங்களை முன்யோசனையுடன் செயல்படுத்துவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புதிய வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. புத்திரர் கவனக்குறைவால் உடல்நல பாதிப்பு அடைவர். உரிய சிகிச்சை ஆரோக்கியம் தரும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் பெற்றுத்தரும. எதிரியால் வரும் தொல்லையை திறமைமிகு செயல்களால் சரிசெய்வீர்கள். தம்பதியர் ஒருவர் குறையை மற்றவர் பொறுமையுடன் சரிசெய்து பாசத்துடன் திகழ்வர். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணி செய்வர். உற்பத்தி சிறந்து புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகள் சந்தையில் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து அதிக விற்பனை, உபரி வருமானம் பெறுவர். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் கணவரின் குணநலன்களை பெருமைப்படுத்தும் விதத்தில் செயல்படுவர். குடும்பச்செலவுக்கான பணவசதி சீராக இருக்கும். பணிபுரியும் பெண்கள் நிம்மதியான மனதுடன் செயல்பட்டு பணித்திறனில் முன்னேற்றம் அடைவர். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை உயர்த்த உத்வேகத்துடன் செயல்படுவர். சந்தையில் புதிய வாய்ப்பு கிடைத்து லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த அனுகூலம் அடைவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பயிருக்கு நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பு, பராமரிப்பில் கவனம் வேண்டும். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து திட்டமிட்ட தேர்ச்சி அடைவர்.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
உஷார் நாள்: 5.11.12 காலை 10.45 முதல் 7.11.12 இரவு 7.23 வரை
வெற்றி நாள்: அக்டோபர் 24, 25, 26
நிறம்: ஆரஞ்ச், நீலம், எண்: 1, 8.