வெற்றிச்சிந்தனையுடன் செயல்படும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பலம்பெற்று, உச்சம் பெற்ற ராகுவுடன் ராசியிலேயே உள்ளார். இதனால் மனதில் குழப்பமும் செயல்களில் தடுமாற்றமும் ஏற்படலாம். குருவின் ஏழாம் பார்வை ராசியில் பதிவதால் உங்கள் நலனில் அக்கறை உள்ளவரின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. குரு, சுக்கிரன் நல்ல பலன்களைத் தந்து உங்கள் வாழ்வை வளப்படுத்துவர். இளைய சகோதரர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வீடு, வாகனத்தில் திருடர் பயம் இன்றி இருக்க உரிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்துவது நல்லது. புத்திரர்களின் செயல்பாடு மனதிற்கு திருப்தி அளிக்கும். உடல்நலம் குறைவதால் பணிகளில் தாமதம் இருக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம் நிலவும்.தொழிலதிபர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உற்பத்தியை சீராக்க கூடுதல் செலவை எதிர்கொள்ள நேரிடும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் மென்மையான போக்கைக் கடைபிடிப்பதால் மட்டுமே வியாபாரம் சீரான வளர்ச்சி பெறும். பணியாளர்கள் குடும்பச் சூழ்நிலை உணர்ந்து பணியில் ஆர்வம் கொள்வது முக்கிய தேவையாகும். இயந்திரங்களை கையாளும் பணியாளர்கள் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறும் வகையில் குடும்ப பொறுப்புக்களை நிறைவேற்றுவர். பணிபுரியும் பெண்கள் கூடுதல் கவனமுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத நிலை இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் சராசரி உற்பத்தி, விற்பனை இலக்கை அடைவர். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் தலையிடாமல் தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூடும். கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனநிறைவு தரும். மாணவர்கள் படிப்பில் கவனமும் வாகன பய ணங்களில் மிதவேகமும் பின்பற்றுவது நல்லது.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் சகல நன்மையும் உண்டாகும். உஷார் நாள்: 2.11.12 நள்ளிரவு 12.01 முதல் 5.11.12 காலை 10.45 வரை வெற்றி நாள்: அக்டோபர் 23, 24 நிறம்: பச்சை, வெள்ளை,எண்: 5, 7.
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »