புனர்பூசம் 4ம் பாதம்: எந்த சூழ்நிலையிலும் முன்வைத்த காலை பின் வைக்காமல் தைரியமாக செயல்படும் உங்களுக்கு இந்த மாதம் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரிய தடை தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். சுகஸ்தானாதிபதி சுக்கிர பகவான் ராசியில் சஞ்சரிக்கிறார். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்.கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது. பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். சந்திராஷ்டமம்: செப். 26 அதிர்ஷ்ட தினம்: அக். 13, 14
பூசம்: நிதானமாக செயல்பட்டு படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு இந்த மாதம் குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். பஞ்சமாதிபதி செவ்வாய் பகவான் சூரிய பகவானுடன் இணைந்து தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தைரியம் அதிகரிக்கும். ஜீரண கோளாறுகள் ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும். காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை. பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம். கலைத்துறையினருக்கு கிரகசூழ்நிலை சாதகமாக இல்லாததால் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும். பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட நன்று. கடன் தொல்லை அகலும். சந்திராஷ்டமம்: செப். 27 அதிர்ஷ்ட தினம்: செப். 18; அக். 14, 15
ஆயில்யம்: கவலை, பயம் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும் உங்களுக்கு இந்த மாதம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். நக்ஷத்ராதிபதி புதன் பகவான் ராசிக்கு 2மிடத்தில் சஞ்சரிக்கிறார். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெறுவீர்கள். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. உபதொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பரிகாரம்: தினமும் வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றி தரிசித்து வர மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். சந்திராஷ்டமம்: செப். 28, 29 அதிர்ஷ்ட தினம்: செப். 18, 19; அக். 15, 16
மேலும்
கார்த்திகை ராசி பலன் (16.11.2024 முதல் 15.12.2024 வரை) »