பதிவு செய்த நாள்
12
ஜன
2024
06:01
விசாகம் 4 ம் பாதம்: விவேகத்திற்கும் வித்தைகளுக்கும் அந்தஸ்திற்கும் காரகனான குரு, தைரிய வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு துணிச்சலும் தைரியமும் மன உறுதியும் பிறவி சொத்தாகும். இந்த மாதம் உங்களுக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவான் முன்னேற்றமான பலன்களை வழங்குவார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் நன்மை அதிகரிக்கும். அரசுவழி முயற்சிகள் ஆதாயம் தரும். தடைபட்ட செயல்கள் நடைபெற ஆரம்பிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசிடம் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியாளர்களின் சங்கடங்கள் விலகும். சுக்கிரனின் சஞ்சாரங்களால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். கணவன், மனைவிக்குள் உண்டான பிரச்னை விலக ஆரம்பிக்கும். வியாபாரம், தொழிலில் இருந்த நெருக்கடி விலகி லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். குலதெய்வ வழிபாட்டால் சங்கடம் விலக ஆரம்பிக்கும் என்றாலும், சிலருக்கு தேவையில்லாத சங்கடங்கள் தோன்ற வாய்ப்பு இருப்பதால் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்தவற்றை அடையும் நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 20.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 18,21,27,30. பிப். 3,9,12.
பரிகாரம்: செவ்வாய் பகவானுக்கு சிவப்புநிற வஸ்திரம் சார்த்தி வழிபட சங்கடம் தீரும்.
அனுஷம் : ஆயுள்காரகன், கர்மகாரகனான சனி, தைரிய வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு துணிச்சலும் தைரியமும், எடுத்த செயலை முடிக்கும் வலிமையும் இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் 4ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அலைச்சல் கூடுதலாக இருக்கும். வருமானத்தில் சில தடைகளும் ஏற்படும் என்றாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சிலருக்கு மருத்துவச்செலவுகள் உண்டானாலும் உடல்நிலை சீராகும். 3 ம் இட சூரியனால் அரசு வழி செயல்களில் ஆதாயம் ஏற்படும். தடைபட்ட முயற்சிகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் ஏற்படும். அரசியல்வாதிகளின் நிலை உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். குருவின் பார்வைகளால் சங்கடங்கள் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும் என்றாலும் உடல் நிலையில் கவனம் தேவை. செயல்களில் விழிப்புணர்வு அவசியம். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதுடன் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 20,21.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,18,26,27. பிப். 8,9.
பரிகாரம்: கபாலீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட கஷ்டம் தீரும்.
கேட்டை: சகோதர காரகனான செவ்வாய், வித்யாகாரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு பக்கம் வேகம் இருந்தாலும் மறுபக்கம் விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். இந்த மாதம் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், 11ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், குருவின் பார்வைகளும், சுக்கிரனின் சஞ்சார நிலைகளும் இதுவரையிருந்த சங்கடங்களை இல்லாமல் செய்யும். உங்கள் வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணியில் இருந்த நெருக்கடி விலகும். தொழிலாளர்கள் நிலை உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். 4ம் இட சனியால் அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சியால் அனைத்திலும் லாபம் உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் பகவானும் 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சி யாவும் லாபமாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். கணவன், மனைவிக்குள் இருந்த சங்கடம் விலகும். பெண்களுக்கு குடும்பம், தொழில், பணியில் இருந்த நெருக்கடி விலகி நிம்மதியான நிலை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வருவாய் உயரும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜன. 21,22.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 18, 23, 27. ஜன.5,9.
பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடங்கள் தீரும்.