பதிவு செய்த நாள்
12
ஜன
2024
06:01
மூலம்: ஞான மோட்ச காரகனான கேது, புத்திர காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றையும் முன்னதாகவே அறிந்து அதற்கேற்ப செயல்படும் ஆற்றல் இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் ராசிநாதன் 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையிருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். வியாபாரம், தொழில், பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். நினைத்ததை சாதிக்கும் நிலை ஏற்படும். உங்கள் திறமைக்கு மதிப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் நட்சத்திரநாதன் 10ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. சுக்கிரனின் சஞ்சார நிலைகளால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். குடும்பத்தில் இருந்த சங்கடம் போகும். பெண்களுக்கு இது யோக காலமாக இருக்கும். கல்வி, பணி போன்றவற்றில் எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வந்து சேரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய பணம் வரும். மாணவர்கள் கல்வியில் கூடுதலாக கவனம் செலுத்துவதால் நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 22,23.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 16,21,25,30. பிப். 3,7,12.
பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட கஷ்டம் தீரும்.
பூராடம்: அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன், அந்தஸ்து, ஆற்றலை வழங்கும் குருபகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்தவொன்றையும் ஆழ்ந்தறிந்து அதில் வெற்றி அடையும் சக்தி இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் நட்சத்திர நாதனும், ராசி நாதனும் இணைந்துநன்மைகளை வழங்க இருக்கிறார்கள். உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் இப்போது விலகும். பணியில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். மற்றவர்களுக்கிடையில் தனித்திறமை வெளிப்படும். பாராட்டிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். புதிய சொத்து, பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். இதுவரை தள்ளிப்போன நல்ல விஷயங்களை இப்போது கையில் எடுப்பீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். பெண்களின் வாழ்வில் இது வசந்த காலமாக இருக்கும். இதுவரையில் எதிர்பார்த்திருந்ததை எல்லாம் அடையும் நிலை உண்டாகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மதிப்பும் பொறுப்பும் அதிகரிக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கேட்டு மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.
சந்திராஷ்டமம்: ஜன. 23,24.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,21,30, பிப். 3,6,12.
பரிகாரம்: அஷ்ட லட்சுமி வழிபாடு அல்லல் போக்கும்.
உத்திராடம் 1 ம் பாதம்: ஆற்றல்காரகன் ஆன்ம காரகனான சூரியன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, திட்டமிட்டு செயல்படக்கூடிய ஆற்றல் என்பது எப்போதும் இருக்கும். இந்த மாதம் சனி பகவான் 3 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் யாவும் முன்னேற்றமடையும். ஏழரை சனியின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். குருபகவானின் பார்வைகள் பாக்ய, லாப, ஸ்தானங்களின் மீதும் உங்கள் ராசியின் மீதும் பதிவதால் எல்லா விதமான நன்மைகளும் இக்காலத்தில் உங்களுக்கு நடந்தேறும். இதுவரையில் எதிர்பார்த்து நடக்காமல்போன யாவும் இனி நடந்தேறும். வரவுகள் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சங்கடங்கள் யாவும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழி செயல்களில் ஆதாய நிலை உண்டாகும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண முயற்சிகள் நிறைவேறும். பெண்களின் விருப்பங்கள் பூர்த்தியாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். தெய்வ அருள் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பீர்கள். குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்று செயல்படுவீர்கள். மாணவர்களின் நிலையில் முன்னேற்றம் தோன்றும். படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 25.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 19,21,28,30. பிப். 1,3,10,12.
பரிகாரம்: சூரிய பகவானுக்கு செந்தாமரை மலரை சார்த்தி வழிபட வளமுண்டாகும்.