பதிவு செய்த நாள்
12
ஜன
2024
06:01
உத்திராடம் 2,3,4 ம் பாதம்: ஆத்ம காரகனான சூரியன், ஆயுள்காரகனான சனியின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் தனி ஆற்றல் இருக்கும். மற்றவர்களை உங்கள் செயல்களில் பங்கேற்க வைக்கும் சாமர்த்தியம் இருக்கும். உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் இதுவரையிருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். தொழில் தொடங்க மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். இதுவரை உடலில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். ஆரோக்கியமாக செயல்படத் தொடங்குவீர்கள். மற்றவர்களால் உண்டான நெருக்கடி விலகி முன்னேற்றப் பாதையில் பயணிப்பீர்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தெய்வீக அருள் உண்டாகும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு உங்கள் முயற்சிகளை முன்னேற்றம் அடைய வைக்கும். வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவார். அரசியல்வாதிகளுக்கு தடைகள் விலகும். புதிய பொறுப்பு வந்து சேரும். பணியாளர்களின் நிலை உயரும். பணியாளர்களுக்கு விருப்பம் நிறைவேறும். பெண்களுக்கு உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு நிவாரணம் உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். பொன்,பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: ஜன. 25.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,19,26,28. பிப். 8,10.
பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வளம் உண்டாகும்.
திருவோணம்: உடலுக்கும் மனதிற்கும் காரகனான சந்திரன், ஆயுள்காரகனான சனிபகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்தவொரு செயலையும் தனித்து நின்று செய்து வெற்றி அடையும் சக்தி இருக்கும். இந்த மாதம் ஜென்ம சனிக்காலம் முடிவதால் உங்கள் நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். சனிபகவானின் பார்வை ஆயுள் ஸ்தானத்தில் பதிந்தாலும் குரு பகவானின் பார்வையின் காரணமாக சங்கடங்கள் விலகும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். செல்வாக்கு உயரத் தொடங்கும். தொழிலை விரிவு செய்வதற்குரிய முயற்சியை மேற்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேருவர். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விரய ஸ்தானத்தின் மீது குருபார்வை பதிவதால் சுபச்செலவு அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிலர் இருக்கும் இடத்தை மாற்றம் செய்வர். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளின் நிலையில் வெளிச்சம் உண்டாகும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். பெண்கள் மனதில் இருந்த எதிர்பார்ப்பு நிறைவேறும். கல்வி, வேலை வாய்ப்பு கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் ஆசிரியர்களிடம் ஆலோசனையை கேட்பது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன.26.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,20,26,29. பிப். 2,8,11.
பரிகாரம்: சந்திர பகவானுக்கு வெள்ளை நிற வஸ்திரம் அணிவித்து வழிபட சங்கடம் தீரும்.
அவிட்டம் 1,2 ம் பாதம்: தைரிய காரகனான செவ்வாய், ஆயுள் காரகனான சனியின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, எந்தவொரு செயலிலும் ஆதாயம் காணும் அறிவிருக்கும். இந்த மாதம் உங்கள் ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் வேலைகளில் டென்ஷன் உண்டாகும். விளைவு பற்றி யோசிக்காமல் பரபரப்பாக செயல்படுவீர்கள். 3ம் இட ராகுவால் முன்னேற்றம் அடைவீர்கள். தைரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். செயல்களில் இருந்த தடைகள் விலகும். வியாபாரம் தொழிலில் புதியபாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தெய்வ அருளும் பெரியவர்களின் ஆதரவும் உண்டாகும். மற்றவர்களை நம்பி ஒப்படைக்கும் காரியங்களில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும் என்பதால் உங்கள் செயல்களில் நேரடியாக ஈடுபடுவதால் பிரச்னை இருக்காது. அலுவலகப் பணியில் வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். தொழிலாளர்களுக்கு சில நெருக்கடி தோன்றும் என்றாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். வரவு சீராகும். எல்லாவித சங்கடங்களை சமாளித்து முன்னேற்றம் காண்பீர்கள். பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 27.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,18,26. பிப். 8,9.
பரிகாரம்: முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.