பதிவு செய்த நாள்
11
மார்
2024
05:03
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் அரசு வழியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். தடைப்பட்டிருந்த செயல்கள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கவும், வெளிநாடு செல்லவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அனுமதி கிடைக்கும். புத பகவானின் சஞ்சார நிலையால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றாலும் கையெழுத்திடும்முன் படித்து சரிபார்த்துக் கொள்வது நல்லது. சனிபகவான் பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் தாமே செய்வதால் சிரமங்கள் இல்லாமல் போகும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் ராசிநாதன் உங்களை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்வார். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். அது ஆதாயத்தை நோக்கிச் செல்லும். வருமானம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் அதிர்ஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப்.1,2.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,19,24,28, ஏப்.6,10
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட செல்வ வளம் உண்டாகும்.
ரோகிணி: மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கூட்டு கிரகங்களால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகளில் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். கேதுபகவான் சஞ்சார நிலையால் குலதெய்வ அருள் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். இடம் வாங்குகின்ற முயற்சி வெற்றியாகும். ஜீவன ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். முயற்சிக்கேற்ப உங்கள் செயல்கள் லாபமாகும். எதிர்பாராத வரவுகளால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். இந்த மாதத்தில் பெண்கள் யோசித்து செயல்படுவது நல்லது. மாதத்தின் முற்பகுதியில் ஆடம்பர செலவுகள் செய்து சங்கடங்களுக்கு ஆளாக வேண்டியதாக இருக்கும் என்பதால் செலவுகளில் நிதானம் அவசியம். யோசிக்காமல் சில காரியங்கள் செய்து அதனால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். விரய குருவால் குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். விளைச்சல் லாபத்தை வழங்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: ஏப். 2,3
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,20,24,29, ஏப். 6,11.
பரிகாரம்: சிவபெருமானை வழிபட சங்கடம் அனைத்தும் தீரும்.
மிருகசீரிடம்1,2 ம் பாதம்; ரத்த, யுத்த, சகோதர, பராக்கிரம காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எப்போதும் சுறுசுறுப்பும் வேகமும் நிறைந்திருக்கும். இந்த மாதத்தில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனின் நான்காம் பார்வை ராசியில் பதிவதுடன் பத்தாம் பார்வை ராசிக்கு ஏழாம் வீட்டையும் பார்ப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், ராகுவால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைத்ததெல்லாம் நடந்தேறும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். வம்பு வழக்குகள் இல்லாத நிம்மதியான நிலை ஏற்படும். மாதத்தின் முற்பகுதியில் உங்கள் ராசிநாதன் செலவுகளை அதிகரிப்பார். புதிய பொருட்களை வாங்க வைப்பார். உங்கள் அந்தஸ்தை உயர்த்துவார். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். குருபகவானின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களில் பதிவதால் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு ஏற்படும். நிலைமையை உணர்ந்து செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
அரசியல்வாதிகள் கவனமாக செயல்படுவதால் தலைமையின் அன்பைப் பெறமுடியும். புதிய பொறுப்புகளை அடைய முடியும். மாணவர்கள் தேர்வை கவனத்தில் கொண்டு படிப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஏப். 3,4.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,18,24,27, ஏப்.6,9.
பரிகாரம் முருகனை வழிபட முன்னேற்றம் ஏற்படும்.