பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
சித்திரை 3,4 ம் பாதம்: தைரிய காரகனான செவ்வாய், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த நீங்கள் தைரியமாக செயல்பட்டு முன்னேற்றம் அடையக்கூடியவர்களாக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றும் மாதமாக இருக்கும். மாதத்தின் முற்பகுதியில் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் ஆற்றல் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு அகலும். தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய வேலை அமையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு யோகமான காலமாக இருக்கும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி வெற்றி பெறும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 6, 7
அதிர்ஷ்ட நாள்: மே. 15, 18, 24, 27, ஜூன் 9
பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை வழிபட நன்மை அதிகரிக்கும்.
சுவாதி: யோகக்காரகன் ராகு, அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படக் கூடியவர்களாக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதமாகும். உங்கள் நட்சத்திரநாதன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். செயல்கள் யாவும் வெற்றி பெறும். உடலிலும், மனதிலும் புது தெம்பு வந்தது போல் இருக்கும். தொழில், வியாபாரம், பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். அரசியல்வாதிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவரது ஏழாம் பார்வை உங்கள் குடும்ப, தன ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி பெறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 7, 8
அதிர்ஷ்ட நாள்: மே 15, 22, 24, 31, ஜூன் 4, 6. 13
பரிகாரம்: வராகியம்மனை வழிபட்டால் வாழ்வு வளமாகும்.
விசாகம் 1,2,3 ம் பாதம்; தனக்காரகனான குரு, அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் சக்தி இயல்பாக இருக்கும். பிறக்கும் வைகாசி மாதத்தை அதிர்ஷ்ட மாதம் என சொல்லலாம். உங்கள் நட்சத்திரநாதன் எட்டாம் இடத்தில் மறைவு பெற்றாலும் அவரது பார்வைகள் உங்கள் நிலையை உயர்த்தும். புதிய சொத்துடன் நவீன பொருட்களையும் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபிட்ச நிலை ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ராகுவின் சஞ்சார நிலையால் அதிர்ஷ்டம் தேடிவரும். நீண்ட நாட்களாக தடைபட்ட முயற்சிகள் வெற்றி பெறும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இக்காலத்தில் பின்வாங்குவர். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரம், தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு செய்யும் தொழிலில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயிகள் நிலையில் இருந்த சங்கடம் விலகும். மாணவர்கள் எண்ணியது நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 8, 9
அதிர்ஷ்ட நாள்: மே. 15, 21, 24, 30, ஜூன் 3, 6, 12
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட நன்மை அதிகரிக்கும்.