பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
உத்திரம் 2,3,4 ம் பாதம்: புதன், சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு வெற்றி தேவதை எப்போதும் துணையிருப்பாள். வைகாசி மாதம் யோகமான மாதமாக இருக்கும். தனக்காரகனான குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து 5ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் வாழ்வில் இருந்த சங்கடம் அனைத்தும் மறைந்து விடும். அதிர்ஷ்ட மழையில் நீங்கள் நனையப் போகிறீர்கள். பொன்னும் பொருளும் சேர்வதுடன் புதிய சொத்தும் உங்களை வந்தடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். 6 ல் சஞ்சரிக்கும் சனிபகவான் சங்கடங்களை எல்லாம் விலக்குவார். உடல் பாதிப்பு மறையும். தொழில், வேலையில் உள்ள நெருக்கடி மறையும். எதிரி தொல்லைகள் விலகுவதுடன் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் பிரச்னை நீங்கும். பெண்களுக்கு நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும். விவசாயிகளுக்கு கடந்த மாதம் இருந்த நெருக்கடி தீரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களின் விருப்பம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 4, 5
அதிர்ஷ்ட நாள்: மே 14, 19, 23, 28, ஜூன் 1, 10
பரிகாரம்: விநாயகரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.
அஸ்தம்: சந்திரன், புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் சக்தி இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்க்கையில் வளம் தரும் மாதமாக இருக்கும். ஜென்ம கேதுவால் எல்லாவித சங்கடங்களையும் அனுபவித்து வந்ததுடன், நோயுடன் போராடி வந்த உங்களுக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் அவற்றில் இருந்து விடுதலை உண்டாகப் போகிறது. குருவின் பார்வைக்கு கேது ஆளாவதால் அவரால் எந்த சங்கடங்களையும் ஏற்படுத்த முடியாது. இனி நீங்கள் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். 6 ல் சஞ்சரிக்கும் சனி பகவானும் சங்கடங்களை விரட்டியடிப்பார். தைரியமாக செயல்பட்டு வெற்றி அடையும் நிலையை ஏற்படுத்துவார். தொழில், வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம், உயர்வு உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் கனவு நனவாகும். பெண்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். தைரியமாக செயல்படும் நிலை ஏற்படும். விவசாயிகள் கடந்த காலத்தில் சந்தித்த நெருக்கடிகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த நன்மை ஏற்படும். கலைஞர்களுக்கு இது யோகமான மாதம். மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 5, 6
அதிர்ஷ்ட நாள்: மே14, 20, 23, 29, ஜூன் 2, 11
பரிகாரம்: சந்திரனுக்கு வெள்ளை அல்லியை சார்த்தி வழிபட வாழ்வு வளமாகும்.
சித்திரை 1,2 ம் பாதம்; செவ்வாய், புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தைரியம், விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் சக்தி இருக்கும். வைகாசி மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக இருக்கும்.
சனி 6ல் சஞ்சரிப்பதாலும், குரு 9ல் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதுடன் 3, 5 ம் இடங்களை பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். நிறைவேறாமல் போன முயற்சி இனி நிறைவேறும். தடைபட்ட செயல்களில் லாபம் ஏற்படும். இழுபறியாக இருந்த வம்பு வழக்குகள் சாதகமாகும். செல்வாக்கு உயரும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் உண்டான போட்டி விலகும். நண்பர்கள், வாழ்க்கைத்துணையுடன் தோன்றிய நெருக்கடிகள் நீங்கும். ஜென்ம கேதுவால் ஏற்பட்ட குழப்பம் தீரும். புதிய இடம், வாகனம் வாங்குவது போன்ற முயற்சிகள் வெற்றியாகும் சிலர் புதிய தொழில் தொடங்குவர். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்கள் நிலை உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். பெண்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகி சுமூக நிலை ஏற்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகளின் விருப்பம் நிறைவேறும். கலைஞர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். மாணவர்களின் கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 6, 7
அதிர்ஷ்ட நாள்: மே 14,18,23,27, ஜூன் 5, 9
பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட்டு வர நலம் உண்டாகும்.