பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
விசாகம் 4 ம் பாதம்: தைரிய காரகனான செவ்வாய், ஞானக் காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த நீங்கள் துணிச்சலும் அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்வில் பொற்காலமாக இருக்கப் போகிறது. உங்கள் நட்சத்திர நாதன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 7 ம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதால் இது நாள் வரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் இப்போது விலகும். அந்தஸ்தும் கவுரவமும் உங்களை வந்து சேரும். வேலை வாய்ப்பு, புதிய தொழில் தொடங்குதல், தொழிலில் முன்னேற்றம், சொத்து சேர்க்கை என கனவெல்லாம் நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். 4 ம் இடத்துச் சனியின் 10 ம் பார்வை உங்கள் ராசிக்கு ஏற்பட்டு அதனால் உடல்நிலையில் பாதிப்படைந்து வந்த உங்களுக்கு குருவின் பார்வையால் உடல்நிலை சீராகும். வெளிநாட்டு முயற்சிகள், கூட்டுத்தொழில்கள் யாவும் இப்போது வெற்றியாகும். வருமானம் பல வகையிலும் வர ஆரம்பிக்கும். பெண்களுக்கு உடல்நிலை சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். புதிய பதவி பொறுப்பு வந்து சேரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களின் மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 9
அதிர்ஷ்ட நாள்: மே 18, 21, 27, 30, ஜூன் 3, 12
பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட நன்மை அதிகரிக்கும்.
அனுஷம்: ஆயுள்காரகனான சனி, சகோதரகாரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் சக்தி இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்களுக்கு யோக மாதமாக இருக்கும். ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு ஒருபக்கம், மாதத்தின் பிற்பகுதியில் 6ம் இடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்கும் ராசிநாதன் மறுபக்கம், லாப ஸ்தான கேதுவால் யோகம் என இந்த மாதம் உங்களுக்கு முன்னேற்ற மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் நட்சத்திர நாதன் சனிபகவான் 4ல் சஞ்சரித்து அவரது 10 ம் பார்வையால் உடல், மனம், தொழில், உத்தியோகம், வருவாய் ரீதியாக நெருக்கடிகளை அடைந்துவரும் உங்களுக்கு இனி விடுதலை உண்டாகும். நெருக்கடிகள் விலகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். செல்வாக்கு உயரும். பெண்களுக்கு உடல் நிலையும், மனநிலையும் சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். விவசாயிகள் விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கப் பெறுவர். மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே 14, ஜூன் 9, 10
அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27, ஜூன் 8
பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டால் குறையனைத்தும் நீங்கும்.
கேட்டை; கல்விக்காரகனான புதன், ரத்தக் காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு வீரத்துடன் விவேகமும் நிறைந்திருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்க்கையில் நன்மைகளை உண்டாக்கும் மாதமாக இருக்கும். இதுவரை நீங்கள் அடைந்து வந்த சங்கடங்கள் விலகி விடுதலை கிடைக்கும். உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் உங்களுக்கு நன்மை வழங்க, பிற்பகுதியில் ராசிநாதன் யோகத்தை உண்டாக்க உள்ளனர். புதிய இடம் வாங்குவது, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது என உங்கள் எதிர்காலத்திற்குரிய நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குரு பகவானின் பார்வைகள் லாப ஸ்தானம், ராசிக்கு உண்டாவதால் பொன்னும் பொருளும் சேரும். நெருக்கடிகள் விலகும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம். பதவி உயர்வு ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.. உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். வழக்குகள் சாதகமாகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பெண்களுக்கு நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதன் மூலம் லாபம் காண முடியும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களின் மேற்கல்வி ஆசை பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: மே 14, 15, ஜூன் 10, 11
அதிர்ஷ்ட நாள்: மே 14, 18, 23, 27, ஜூன் 5, 9
பரிகாரம்: பெருமாளை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.