பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
11:06
அசுவினி: ரத்தக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக்காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதத்தில் நட்சத்திரநாதன் 6ல் சஞ்சரிப்பதுடன் குருவின் பார்வையும் அங்கே பதிவதால் பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். நோய்கள் நீங்கும். வியாபாரம் தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.
லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும் என்றாலும் வாரத்தின் முற்பகுதியில் சனி வக்ரமடைவதால் தொழிலில் அக்கறை செலுத்துவது அவசியம். தன ஸ்தான குருவால் வருமானம் அதிகரிக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்ய முடியும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வமும் செல்வாக்கும் உயரும். தொழில் விருத்தியாகும்.
வேலைக்காக முயற்சித்து வந்தவர்களின் எண்ணம் நிறைவேறும். அஷ்டம, ஜீவன ஸ்தானங்களுக்கு குருவின் பார்வை உண்டாவதால் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வந்து சேரும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் இருப்பர். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சிலருக்கு சொத்து சேர்க்கை, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 20, 21.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16,18,25,27, ஜூலை 7,9,16
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட வாழ்வு வளமாகும்.
பரணி : அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், தைரியக்காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஆனி மாதம் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப் போகிறது. முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி யாவும் வெற்றியாகும். அரசுவழி செயல்கள் ஆதாயம் தரும். இதுவரையில் சங்கடத்திற்கு ஆளாகி வந்த நிலை இனி மாறும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வந்து சேரும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். விவசாயிகளுக்கு இதுவரை இந்த நெருக்கடி குறையும். பணியாளர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 21, 22.
அதிஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27, ஜூலை 6, 9, 15.
பரிகாரம்: காளியை வழிபட தொல்லை விலகும். நன்மை உண்டாகும்.
கார்த்திகை: 1 ம் பாதம்: ஆத்ம காரகனான சூரியன், வீரிய காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த நீங்கள் எங்கு இருந்தாலும் அங்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவராக இருப்பீர்கள். பிறக்கும் ஆனி மாதம் நட்சத்திரநாதன் சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகி நன்மை அதிகரிக்கும். நினைத்ததை எல்லாம் நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி, சங்கடம் விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும்.
வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலைக்குரிய அனுமதி கடிதம் வரும். சனியின் பார்வை ராசி, அஷ்டம ஸ்தானத்திற்கு இருப்பதால் பல சங்கடங்களை சந்திக்கும் நிலையில் ஜூன் 19 முதல் சனி வக்கிரம் அடைவதால் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். செல்வாக்கு மேம்படும். 6ம் இடத்திற்கு குருபகவானின் பார்வையும், அங்கே கேதுவும் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். விவசாயிகளின் விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். பொன், பொருள் சேரும்
சந்திராஷ்டமம்: ஜூன் 22
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 19, 27, 28, ஜூலை 1, 9, 10
பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட அதிர்ஷ்டம் உண்டாகும்.