பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
12:06
பூரட்டாதி 4 ம் பாதம்: குருவின் அம்சத்தில் பிறந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனிமாதம் நம்பிக்கையை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் மறைவு பெற்றாலும் அவருடைய பார்வைகள் சப்தம, பாக்ய, லாப ஸ்தானங்களுக்கு உண்டாவதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தெய்வ அனுகூலம் ஏற்படும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன்கள் அடைபடும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்கிரம் அடைவதால் செலவுகள் கட்டுக்குள் வரும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் லாபம் சேரும். மாதத்தின் பிற்பகுதியில் மூன்றாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் முயற்சி யாவும் வெற்றியாகும். வெளியூர் பயணம் லாபத்தை உண்டாக்கும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்கு வாய்ப்புண்டாகும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 18, ஜூலை 16
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 30, ஜூலை 3, 12
பரிகாரம்: நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட வாழ்வு சிறக்கும்.
உத்திரட்டாதி: கர்மக்காரகனான சனி, ஞானக்காரகனான குரு அம்சத்தில் பிறந்து விருப்பப்பட்டபடி வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் புதிய பாதையைக் காணும் மாதமாக இருக்கும். இதுவரையில் இருந்த சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் நட்சத்திரநாதன் ஜூன் 19 முதல் வக்கிரமடைவதால் உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். நிம்மதியாக உறங்க முடியும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். தெய்வ அருள் உண்டாகும். விரயச் செலவுகள் கட்டுப்படும். குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் நிலை ஏற்படும். உங்கள் ராசிநாதன் பார்வைகளால் வரவு அதிகரிக்கும். நட்பின் வழியே நன்மை ஏற்படும். தடைபட்டிருந்த பணம் இப்போது வரும். பெரியவர்களின் ஆசீர்வாதம் உண்டாகும். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 18, 19, ஜூலை 16
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 21, 26, 30, ஜூலை 3, 8, 12
பரிகாரம்: காமாட்சியம்மனை வழிபட முயற்சி வெற்றியாகும்.
ரேவதி: வித்யா காரகனான புதன், ஞானக்காரகனான குரு அம்சத்தில் பிறந்து, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் உங்களுக்கு பிறக்கும் ஆனிமாதம் யோக மாதமாக இருக்கும். 4 ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனால் மனம் தெளிவாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். இதுவரை ஏற்பட்ட படிப்பினைகளை வைத்து முன்னேற்றத்திற்கு வழிகாண்பீர்கள். இந்த நேரத்தில் உங்கள் ராசிநாதனின் பார்வைகளும் உங்களுக்கு யோகத்தை உண்டாக்கப் போகிறது. வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நண்பர்களால் அனுகூலம், ஆதாயம் ஏற்படும். பெரியோரின் ஆதரவு உங்கள் சங்கடங்களைப் போக்கும். பணம் பலவழியிலும் வர ஆரம்பிக்கும். தொழில், குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 11 ம் இடத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் புதிய நண்பரகள் உண்டாவார்கள். அவர்களால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார் என்பதால் நியாயமான செயல்களில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்கிரம் அடைவதால் செலவு கட்டுக்குள் வரும். பணநெருக்கடி விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூன். 19, 20
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30, ஜூலை 3, 5, 12, 14
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட செல்வம் பெருகும்.