பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
12:06
அவிட்டம் 3, 4 ம் பாதம்: தொழில்காரகனான சனி, சகோதரகாரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்து, எதையும் சாதிக்கும் திறன் பெற்ற உங்களுக்கு பிறக்கும் ஆனி நன்மையான மாதமாகும். உங்கள் நட்சத்திரநாதன் மூன்றாம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இதுவரை இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி ஜூன் 19 முதல் வக்கிரமடைவதால் நெருக்கடிகள் விலகும். கூட்டுத்தொழில் லாபமடையும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். குருபகவானின் பார்வை ஆயுள் ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்களை பயமுறுத்திக் கொண்டிருந்த நோய்கள் விலகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வாகனம் ஆகுவது என செலவு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 16, ஜூலை 13, 14
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 25, 27, ஜூலை 8, 9
பரிகாரம்: நவக்கிரகத்தில் சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
சதயம்: யோகக்காரகனான ராகு, கர்மக்காரகனான சனி ஆதிக்கத்தில் பிறந்து சாமர்த்தியமாக செயல்பட்டு சாதனை புரியும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் திருப்புமுனையாக அமையும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்த சனி ஜூன் 19 முதல் வக்கிரமடைவதால் இதுவரை இருந்த நெருக்கடி குறையும். வாழ்க்கைத்துணைக்கு ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் செல்வாக்கை மறைக்க நினைத்தவர்களின் செயல் பலிக்காமல் போகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் பூமி, இடம் சம்பந்தப்பட்ட விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். சிலர் புதிய வீடு கட்டுவீர்கள். கடந்த கால நெருக்கடி விலகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களின் கனவு நனவாகும். கூட்டுத்தொழில் இனி லாபத்தை நோக்கிச் செல்லும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 16, 17, ஜூலை 14, 15
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 22, 26, ஜூலை 4, 8, 13
பரிகாரம்: துர்கையை வழிபட அமோக லாபம் பெருகும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: தனக்காரகனான குரு, தொழில்காரகனான சனி அம்சத்தில் பிறந்து தடைகளைத் தாண்டி வெற்றி பெறும் உங்களுக்கு பிறக்கும் ஆனியில் நெருக்கடிகள் விலகும். ஜென்ம ராசிக்குள் சனி, 2 ல் ராகு, 8 ல் கேது, 4 ல் குரு என கிரகங்கள் நெருக்கடி ஏற்படுத்தி வரும் நிலையில், 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் முயற்சிகளை வெற்றியாக்குவார். செயல்களை லாபமாக்குவார். வருவாயை அதிகரிப்பார். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் எதிர்பார்த்த பணவரவை கொண்டு வந்து சேர்ப்பார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். ஜூன் 19 முதல் சனி வக்கிரம் அடைவதால் அவரால் உண்டான சங்கடங்கள் விலகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தைரியமாக செயல்படத் தொடங்குவீர்கள். குருவின் பார்வைகள் அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்கள் உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். செல்வாக்கு வெளிப்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய சொத்து, வாகனம் என விருப்பம் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசு வழியிலான முயற்சியில் ஆதாயம் உண்டாகும். எதிர்ப்பு விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 17, 18, ஜூலை 15, 16
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 26, 30, ஜூலை 3, 8, 12
பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட்டால் தடையனைத்தும் விலகும்.