பதிவு செய்த நாள்
14
நவ
2012
04:11
கார்த்திகை ராசிபலன் (16.11.12-15.12.12): அயராத உழைப்பினால் வெற்றி அடையும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு குருபகவான் மட்டுமே நல்ல பலன்களைத் தரும் விதமாக செயல்படுகிறார். பிறரிடம் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிக்க முயல்வீர்கள். பணவரவு நிதானமாக இருக்கும். சிக்கனமாக இருப்பது நன்மையளிக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்புச் செலவு கூடும். தாயின் ஆலோசனையை ஏற்று நடந்து முன்னேற்றம் பெறுவீர்கள். புத்திரரின் படிப்பு, அன்றாட நடைமுறைகளில் தாமதம், குளறுபடி ஏற்படும். தகுந்த ஆலோசனை அளிப்பது அவசியம். பூர்வசொத்தில் வருமானம் சுமாராக இருக்கும். உடல்நலத்தைக் கவனத்துடன் பேணுவது நல்லது. கேளிக்கை விருந்துகளில் கலந்துகொள்வதை தவிர்க்கலாம். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற சிலர் கடன் வாங்க நேரிடும். எதிரிகளை இனம் கண்டு விலகுவீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் குறை காண்பதை தவிர்ப்பதால் மட்டுமே ஒற்றுமை சீராக இருக்கும். தொழிலதிபர்கள் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே உற்பத்தி, லாபத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். வியாபாரிகள் சந்தை நிலவரத்திற்கேற்ப புதிய உத்திகளை கையாள்வதால் ஆதாயத்தை அதிகரிக்கலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுவதில் கவனம் செலுத்துவது அவசியம். பணிபுரியும் பெண்கள் பணியிலக்கை எட்டுவதில் தாமதத்தைச் சந்திப்பர். குடும்ப பெண்கள் கணவரின் பணவரவுக்கு ஏற்ப செலவுக் குறைப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் லாபத்தை சீராக்குவர். அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளிடம் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதால் சிரமத்தை சந்திக்கலாம். கவனம். விவசாயிகளுக்கு மிதமான மகசூல், மிதமான பணவரவு உண்டு. மாணவர்கள் எதிர்கால நலன் கருதி அக்கறையுடன் படிப்பது அவசியம்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் தொழில் சிறந்து எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
உஷார் நாள்: 16.11.12 காலை 10.40 வரை, 11.12.12 மாலை 4.18 முதல் 13.12.12 மாலை 6.38 வரை
வெற்றி நாள்: நவம்பர் 30, டிசம்பர் 1, 2
நிறம்: மஞ்சள், ரோஸ் எண்: 1, 3