பதிவு செய்த நாள்
14
செப்
2024
03:09
விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்; செயல்களில் தெளிவும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் அதிர்ஷ்ட மாதம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். நீண்ட காலமாக நீங்கள் கண்டு வந்த கனவுகளை நனவாக்குவார். உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செய்துவரும் தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். சகோதரர்களால் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு உயர்வு உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். இடம் வாங்கும் முயற்சி பலிக்கும். வங்கியில் கேட்டிருந்த லோன் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான காலமாக இது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். சுக்கிர பகவானின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை, வாகனம் வாங்கும் யோகம், சுக போக பாக்கியம் உண்டாகும். உங்கள் நிலையில் இக்காலம் யோகமான காலம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ராசிநாதன் மறைவு பெறுவதால் விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நிதானமும் கவனமும் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: செப். 24.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 21, 27, 30. அக். 3, 9, 12.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
அனுஷம்: நிதானமாக செயல்படும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். சனி பகவானின் வக்கிர நிலையால் அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இக்காலம் உங்களுக்கு முன்னேற்றமான காலம். ராகு, பிள்ளைகள் வழியே சங்கடங்களையும், பூர்வீக சொத்தில் பிரச்னைகளையும் உண்டாக்கி வந்தாலும், குரு பகவானின் பார்வை உங்கள் நிலையை மேம்படுத்தும். வரவு செலவில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வியாபாரம், தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். எதையோ இழந்ததுபோல் அவதிப்பட்டு வந்த நிலை மாற்றம் பெறுவீர்கள். உங்களுடைய முயற்சி இப்போது அதிகரிக்கும். நினைத்ததை அடைய வேண்டும் என்று தைரியமாக செயல்படத் தொடங்குவீர். அதற்கேற்ற காலமாக இக்காலம் இருக்கும். குரு பகவானின் பார்வை உங்களுக்கு பலத்தை அதிகரிக்கும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்னை விலகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோரால் உதவி, அனுகூலம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்து வருபவர்கள் முன்னேற்றம் காண முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும். விவசாயிகள் கவனமுடன் செயல்படுவது அவசியம். குடும்பத்தில் கொண்டாட்டம் நிறைந்து காணப்படும்.
சந்திராஷ்டமம்: செப். 24, 25.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 21, 26. அக். 3, 8, 12, 17.
பரிகாரம்: சிவ பெருமானை வழிபட சங்கடம் யாவும் விலகும். நன்மை அதிகரிக்கும்.
கேட்டை : புத்திசாலித்தனத்துடன் கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். சூரியனால் அரசு வழி முயற்சி யாவும் வெற்றியாகும். இக்காலம் உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். உறவுகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலுவலகப் பணியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்குவரும். ஒரு சிலருக்கு விருப்பப்பட்ட இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு மேம்படும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். சுக்கிர பகவான் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நீடித்து நிலைக்கும். பொன் பொருள் சேரும். சேமிப்பு உயரும். குரு பகவானின் சஞ்சார நிலையும் பார்வைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். இக்காலம் உங்களுக்கு பொற்காலம். இருப்பினும் ராசிநாதன் 8 ம் இடத்தில் மறைவு பெறுவதால் செயல்களில் நிதானமும் அவசியமும் தேவை. மாணவர்களுக்கு இக்காலம் யோகமாக இருக்கும். ஆசிரியர்களிடம் பாராட்டுப்பெறுவீர்கள். சுயதொழில் செய்து வருபவர்கள், பணியாளர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். தடைபட்ட முயற்சி நடந்தேறும்.
சந்திராஷ்டமம்: செப். 25, 26.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 23, 27. அக். 5, 9, 14.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.