பதிவு செய்த நாள்
14
செப்
2024
03:09
தனுசு: மூலம்; திடமான செயல்பாடும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். கேதுவும், ராகுவும் கேந்திர பலம் பெறுவதால் விருப்பம் யாவும் பூர்த்தியாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலக ஆரம்பிக்கும். பணியாளர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வெளிநாட்டு முயற்சி அனுகூலமாகும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் லாபம்தரும். வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தவர்களுக்கு எண்ணம் நிறைவேறும். உங்கள் ஜீவனாதிபதி புதன் உங்களுக்கு நன்மை புரிவார். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்திருந்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான பணம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர். சுய தொழில், வேலைகள் செய்து வருபவர்களுக்கு முயற்சிக்கும், உழைப்பிற்கும் ஏற்ற வருமானம் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். சுக்கிர பகவானின் பார்வையால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் தொடரும். பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் இருந்த பிரச்னை விலகும். வியாபாரத்தில் வருமானம் உயரும். சேமிப்பு அதிகரிக்கும். செவ்வாய் பகவான் சஞ்சரித்து வருவதால் செயல்களில் நிதானம் வேண்டும். எந்த ஒரு வேலையிலும் உங்களுடைய கவனம் நேரடியாக இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது இந்தக் காலத்தில் மிகவும் அவசியம். விவசாயிகள் கவனமுடன் செயல்படவும்.
சந்திராஷ்டமம்: செப். 26, 27.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 25, 30. அக். 3, 7, 12, 16.
பரிகாரம்: விநாயகரை வழிபட வினை தீரும். நன்மைகள் உண்டாகும்.
பூராடம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை லாபமாக்குவார். எதிர்பார்த்த வரவை உண்டாக்குவார். செய்துவரும் தொழில், பார்த்து வரும் உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷத்தை அதிகரிப்பார். இந்த நேரத்தில் குரு பகவானின் பார்வைகள் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை நீக்கி வைக்கும். எதிர்பார்த்த இட மாற்றத்தையும், பதவி உயர்வையும் உங்களுக்கு வழங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைக்கும். சுபச் செலவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்குவரும். அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நல்லதுக்கு அடித்தளமிடும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்குரிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். பிள்ளைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், மருத்துவம், கெமிக்கல், காவல் போன்ற துறைகளில் பணியாற்றுவோர் நிதானமாக செயல்படுவது நன்மையை உண்டாக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்கள் சந்தோஷப்படக்கூடிய அளவிற்கு சாதகமான பலன்கள் இந்த மாதத்தில் உண்டாகும். வேலைக்காக எழுதிய தேர்வு முடிவுகள் வெற்றியைக் கொடுக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 27, 28.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 24, 30. அக். 3, 6, 12, 15.
பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திராடம் 1 ம் பாதம்: தெளிந்த ஞானம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். நட்சத்திரநாதன் மாதம் முழுவதும் கேந்திர பலத்துடன் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகும். உங்கள் திட்டம் எல்லாம் வெற்றியாகும். முயற்சி எல்லாம் பலிக்கும். அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் வேலை ஆதாயத்தில் முடியும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தடைபட்ட முயற்சி நடந்தேறும். தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குரு பகவானின் பார்வையால் வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். புத பகவான் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். இடம் வாங்கும் முயற்சி நிறைவேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். சுக்கிர பகவானின் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் வரவு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். உறவுகளால் ஆதாயம், அனுகூலம் என்ற நிலை ஏற்படும். ஒரு சிலர் தாங்கள் செய்துவரும் தொழிலை வெளியூரில் புதிய கிளைகள் தொடங்கி விரிவு செய்வீர்கள்.
சந்திராஷ்டமம்: செப். 28. 29.
அதிர்ஷ்ட நாள்: செப். 19, 21, 30. அக். 1, 3, 10, 12,
பரிகாரம்: நவகிரக் வழிபாட்டால் வாழ்வில் நன்மை உண்டாகும்.