Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தினமும் ஒரு சாஸ்தா – 18; மனபயமா... ... தினமும் ஒரு சாஸ்தா – 20; குறை தீர்ப்பவர்.. ராமநாதபுரம் கூரி சாத்த அய்யனார்..! தினமும் ஒரு சாஸ்தா – 20; குறை ...
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா - 19; வெற்றிக்கு... குண்டு தாங்கிய அய்யனாரப்பன்!
எழுத்தின் அளவு:
தினமும் ஒரு சாஸ்தா - 19; வெற்றிக்கு...  குண்டு தாங்கிய அய்யனாரப்பன்!

பதிவு செய்த நாள்

05 டிச
2024
05:12

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் குண்டு தாங்கிய அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இங்கு பொற்கலை, பூரணியுடன் அருள்புரிகிறார். இப்பகுதியை பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலம். ஒருநாள் இவர்களுக்கு எதிராக ஆங்கிலேயப்படை கோரிமேடு வரை வந்துவிட்டது. அப்போது பிரெஞ்சுப்படை அங்கு வராததால், வீரன் ஒருவன் தனியாக ஆங்கிலேயப்படையை தடுத்தார். பீரங்கி குண்டுகளால் தாக்கினாலும் அதை சமாளித்து போரிட்டு அவர்களை ஓட விட்டார் வீரன். போர் நடந்த இடத்தில் விசாரணை செய்த போது அந்த வீரன் பற்றிய தகவல் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த இடத்தில் அய்யனார் சிலையும், குண்டுகளும் சிதறிக் கிடந்தன. அய்யனார்தான் காத்தார் என தெரிந்ததும் பிரெஞ்சுக்காரர்கள் கோயில் கட்டி கொடுத்தனர். சுவாமிக்கு ‘குண்டு தாங்கிய அய்யனார்’ என்ற பெயரும் ஏற்பட்டது. இவரை நினைத்து தொடங்கும் செயல்கள் வெற்றி பெறும். ஆவணியில் திருவிழா நடக்கிறது. கோயிலை சுற்றி அங்காள பரமேஸ்வரி, சப்த கன்னிமார்கள், சிவன், சிவகாம சுந்தரி, காவல் தெய்வமாக வீரபத்திரன் உள்ளனர். 


புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ., 

நேரம்: காலை 6:00 - 10:00 மணி, மாலை 5:00 - 8:00 மணி 

தொடர்புக்கு: 93454 15802, 96778 75456


அருகிலுள்ள தலம்: மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் 84 கி.மீ., 

நேரம்: காலை 7:30 - 11:00 மணி, மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 98429 09880, 93814 82008.

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளார் காடந்தேத்தி அய்யனார். இவரை வழிபட்டால் ஏழரை, ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே ஸ்ரீவாரிநகரில் அருள்பாலிக்கிறார் பாலசாஸ்தா. ... மேலும்
 
temple news
ராமநாதபுரத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் கூரி சாத்த அய்யனார். ராமநாதபுரத்தை ஆட்சி செய்தவர்கள் ... மேலும்
 
temple news
விருதுநகர் ராஜபாளையத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில் பாலாறு, நீராறு ஒன்றாக சேர்கிறது. ... மேலும்
 
temple news
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேலம்பாளையத்தில் தர்மசாஸ்தா என்ற அய்யனாரப்பன் அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar