பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
துலாம்; சித்திரை 3, 4 ம் பாதம்.. துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். நீங்கள் நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் அடைந்தாலும், முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் வேலைகளில் லாபத்தை ஏற்படுத்துவார். தடைபட்டிருந்த முயற்சிகளை வெற்றியாக்குவார். அரசு வழியில் எதிர்பார்த்த லாபத்தை ஏற்படுத்துவார். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவருக்கு கனவை நனவாக்குவார். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்க வைப்பார். ராசிநாதன் சுக்ரனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருக்கும். குடும்பம், வியாபாரம், தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். பிரச்னை விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பர். எடுத்த வேலைகளை நடத்தி முடிக்கிற அளவிற்கு உங்களுடைய நிலை மாற்றம் அடையும். ஜன. 1 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவு, புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்:ஜன. 9, 10.
அதிர்ஷ்ட நாள்:டிச. 18, 24, 27. ஜன. 6.
பரிகாரம்: கைலாச நாதரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
சுவாதி: எது வழி சரியோ அந்த வழியில் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னை ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். யோகக்காரகன் ராகு நினைத்ததை சாதித்திடும் நிலையை இப்போது உண்டாக்குவர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் இதுநாள் வரை பிறரால் கண்டும் காணாமல் இருந்த உங்கள் நிலையில் இப்போது மாற்றம் வரும். உடல்நிலையிலும், மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்பு விலகும். துணிச்சலுடன் செயல்படத் தொடங்குவீர். எங்கு போனாலும் தடை, நெருக்கடி என்றிருந்த நிலை இப்போது மாறும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வர். அதனால் நினைத்த வேலைகளைத் தடையின்றி நடத்திக் கொள்ளமுடியும். இழுபறியாக இருந்த வழக்கிலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்புவரும். முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். எந்த அளவிற்கு உங்களுடைய முயற்சிகள் இருக்கிறதோ அந்த அளவிற்கு வெற்றியுண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கு இப்போதே திட்டங்கள் தீட்டலாம். வேலைக்காக முயற்சித்து வருபவர்கள் அதற்குரிய வேலைகளில் தீவிரம் காட்டலாம். எந்த ஒன்று உங்களுக்கு இதுவரை தடையாக இருந்ததோ அவை இப்போது விலகும். செயல்களில் இருந்த சிரமம் விலகும். குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.
சந்திராஷ்டமம்: ஜன. 10, 11.
அதிர்ஷ்ட நாள்: டிச. 22, 24, 31. ஜன. 4, 6, 13.
பரிகாரம்: பிரத்யங்கிராவை வழிபட நன்மை உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்; ஒவ்வொன்றையும் முன்னதாகவே அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் அதிர்ஷ்டமான மாதம். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் வக்ரம் அடைந்துள்ள நிலையில், உங்கள் ராசி நாதன் சுக்ரன் மாதம் முழுவதும் யோகப் பலன்களை வழங்கிட இருக்கிறார். வியாபாரம், தொழிலில் இருந்த தடை விலகி வருமானம் அதிகரிக்கும். நீங்கள் நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் எடுக்கும் வேலை எல்லாம் வெற்றியாகும். யோகக்காரகன் ராகுவால் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டிருந்த வேலை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும்.
சந்திராஷ்டமம்:ஜன. 11.
அதிர்ஷ்ட நாள்:டிச. 21, 24, 30. ஜன. 3, 6, 12.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.