பதிவு செய்த நாள்
31
டிச
2024
12:12
மூலம்: நல்ல நேரம் வந்தாச்சு
குரு, கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2025 ம் வருடம் யோகமான வருடமாக இருக்கும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த உயர்வு, விரும்பிய மாற்றம் ஏற்படும். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு உண்டாகும்.
சனி சஞ்சாரம்: உங்களுக்கு சகாய, முயற்சி ஸ்தானமான 3ல் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனிபகவான், அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவார். நெருக்கடிகளை நீக்குவார். முயற்சிகளில் வெற்றியை ஏற்படுத்துவார். உடல்நிலை, மனநிலை பலமடையும். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் வேலைகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பகைவர் தொல்லைகள் விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி அல்லது பொறுப்பு கிடைக்கும்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை சுக ஸ்தானத்தில் ராகுவும், ஜீவன ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். தொழில், உத்தியோகத்தில் கூடுதல் அக்கறை தேவைப்படும். உங்கள் சந்தோஷத்திற்கான தேடல் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளுடன் இடைவெளி ஏற்படும். மே 26 முதல் 3ம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் இறையருள் கிட்டும். பெரியோரின் உதவி கிடைக்கும். உடல்நிலை முன்னேற்றமடையும். உங்கள் திறமை வெளிப்படும். அரசியல்வாதிகளுக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
குரு சஞ்சாரம்: பிப்.10 வரை 6 ம் இடமான ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் 7 ம் இடமான மிதுன ராசிக்குள் சப்தம குருவாக பிரவேசிப்பவர் அக். 8 முதல் 10 ம் இடமான கடகத்தில் ஜீவன குருவாக சஞ்சரிப்பார். இதனால் மே 11 வரை குருவின் பார்வைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மே 11 முதல் 7 ம் இட பலனனாலும் நன்மைகளை அதிகரிப்பார். ஜென்ம ராசியையும், 3, 11 ம் இடங்களையும் பார்ப்பதால் தன் பார்வைகளாலும் செல்வாக்கு, அந்தஸ்தை அதிகரிப்பார். தைரியம் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணவரவை அதிகரிப்பார். கல்வி, வேலை, திருமணம், குழந்தை, சொந்த வீடு, வாகனம் என கனவுகளை நனவாக்குவார்.
சூரிய சஞ்சாரம்: பிப். 13 - மார். 14, மே 15 - ஜூன். 14, காலங்களிலும், செப்.17 - நவ. 16 காலத்திலும், 3,6,10,11 ம் இட சூரியன் உங்கள் நிலையை உயர்த்துவார். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை வழங்குவார். முடங்கிக் கிடந்த வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவார். உடலில் இருந்த சங்கடம், எதிர்ப்பு, போட்டி, பகை என்ற பாதிப்புகளை இல்லாமல் செய்வார். இழுபறியாக இருந்த வழக்கிலும், வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியிலும் வெற்றியை உண்டாக்குவார். தொழில் தொடங்குவதற்கு அரசு வழியில் கிடைக்க வேண்டிய அனுமதி, உதவிகளை கிடைக்க வைப்பார்.
பொதுப்பலன்: 2025ம் ஆண்டு உங்கள் வாழ்வில் திருப்பு முனையை உண்டாக்கும் ஆண்டாக இருக்கும். இதுவரையில் கனவாக இருந்த ஆசைகள் இப்போது நனவாகும். என்ன முயற்சி செய்தாலும் எதுவும் நடக்காமலேயே இருந்த நிலை மாறும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடிவரும். முயற்சி வெற்றியாகும். மேற்படிப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், வேலை என்ற கனவு நனவாகும்.
தொழில்: முயற்சிகள் மேற்கொண்டும், முதலீடுகள் செய்தும் எதுவும் கூடி வரவில்லை. லாபத்தையும் காண முடியவில்லை. பணியாளர்கள் ஒத்துழைப்பும் போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை என்ற நிலை மாறும். புதிய முயற்சி வெற்றியாகும். மூடிய தொழிற்கூடங்கள் திறக்கப்படும். ஒடாமல் இருந்த இயந்திரங்கள் ஓட ஆரம்பிக்கும்.
தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி, கடன் கிடைக்கும். பைனான்ஸ், ஜூவல்லரி, ஏற்றுமதி இறக்குமதி, நோட்டு, புத்தகம் விற்பனை. ஸ்டேஷனரி, ஷேர் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம், கம்ப்யூட்டர் தொழில்களில் ஆதாயம் கூடும். சினிமா, தொலைக்காட்சி, விவசாயம் லாபம் தரும்.
பணியாளர்கள்: இதுவரை இருந்த குறைகள் விலகும். உழைப்பிற்கேற்ற ஊதியமில்லை, திறமைக்கேற்ற பதவியில்லை என வருந்தி வந்த நிலை மாறும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். எதிர்பார்த்த பொறுப்பும், ஊதிய உயர்வும் கிடைத்து வாழ்க்கை நிலை உயரும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம், உயர்வு கிடைக்கும்.
பெண்கள்: இந்த வருடம் அனைத்திலும் முன்னேற்றமான வருடமாக இருக்கும். என்னதான் முயற்சி செய்தாலும் எதுவும் நடக்கவில்லையே என்ற நிலை மாறும். உங்கள் நிலை உயரும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை என உங்களுக்கேற்ற தேவைகள் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த உயர்வும் மாற்றமும் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தை வழிநடத்தும் சக்தி உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உதவி உங்கள் செல்வாக்கை அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவு நனவாகும்.
கல்வி: படிப்பில் இருந்த தடை விலகும். அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
உடல்நிலை: உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். நோய்களின் பாதிப்பெல்லாம் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போவதுபோல் போகும். மருத்துவச் செலவு குறையும். பரம்பரை நோய், தொற்று நோய், இருதய நோய்கள், சுவாசக்கோளாறுகளால் அனுபவித்து வந்த சங்கடம் குறையும்.
குடும்பம்: உங்கள் அடையாளம் வெளிப்படும். உறவுகளுக்கு மத்தியில் உங்கள் நிலையும் உயரும். தடைபட்ட வேலைகள், வீட்டில் சுப காரியங்கள் நடந்தேறும். சொத்து வாங்குவதிலும், சேமிப்பதிலும் அக்கறை உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர்.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட வாழ்க்கை வளமாகும்.
பூராடம்: முன்னேற்றம்
குரு, சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2025 ம் வருடம் முன்னேற்றமான வருடமாக இருக்கும். இதுவரை இருந்த நெருக்கடிகளும், சிக்கல்களும், போராட்டங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும். எப்படி முயற்சி செய்தாலும் ஏதாகிலும் ஒரு தடை ஏற்பட்டு விடுகிறது என்ற நிலை மாறும். ஆசைகள் எல்லாம் கனவாகவே இருந்த நிலை மாறி அவை நனவாகும் வருடமாக இந்த வருடம் இருக்கும். உங்கள் சாதாரண முயற்சியும் பெரிய வெற்றி தரும். எதிர்பார்த்த உயர்வு, விரும்பிய மாற்றம் ஏற்படும். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு உண்டாகும். சமூகத்தில் உங்கள் நிலை உயரும்.
சனி சஞ்சாரம்: ராசிக்கு 3ல் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியால் முயற்சியெல்லாம் வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சோகம், வெறுப்பு, சலிப்பு, கவலை என்ற நிலை மாறும். இருட்டில் இருந்து வெளிச்சம் வந்தது போல் உங்கள் நிலை மாறும். வேலையில், ஆரோக்கியத்தில், முயற்சியில் இருந்த சங்கடங்கள் முடிவிற்கு வரும். முயற்சிகளில் வெற்றி ஏற்படும். துணிச்சல் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பகைவர் தொல்லைகள் விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய முயற்சிகள் வெற்றியாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் வேலைப்பளு அதிகரிக்கும், தவறுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டியதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக அக்கறையும் முயற்சியும் தேவைப்படும். ஆசைகளின் காரணமாக தவறான நபர்களை நம்பி பயணிக்கும் நிலையுண்டாகும். மே26 முதல் கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் குறைகள் எல்லாம் தீரும். முயற்சி வெற்றியாகும். உடல்நிலை முன்னேற்றமடையும். திறமை வெளிப்படும். அரசியல்வாதிகளுக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். வேண்டுதல்களை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றி வருவீர்கள்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை 6 ம் இடமான ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் 7 ம் இடமான மிதுன ராசிக்குள் சப்தம குருவாக பிரவேசிப்பவர் அக். 8 முதல் 10 ம் இடமான கடகத்தில் ஜீவன குருவாக சஞ்சரிப்பார். இதனால் மே11 வரை குருவின் பார்வைகளால் ஆதாயம் காண்பீர்கள். தொழில், வேலை, புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மே11 முதல் 7ல் சஞ்சரிக்கும் குரு செல்வாக்கு, அந்தஸ்தை உயர்த்துவார். முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். கல்வி, வேலை, திருமணம், குழந்தை, சொந்த வீடு, வாகனம் என்ற கனவுகளை நனவாக்குவார்.
சூரிய சஞ்சாரம்: பிப். 13 - மார். 14, மே15 - ஜூன் 14, காலங்களிலும், செப்.17 - நவ. 16 காலத்திலும், சூரியனால் உங்கள் நிலை உயரும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உடலில் இருந்த சங்கடம், எதிர்ப்பு, போட்டி, பகை என்பது இல்லாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழில் தொடங்க அரசு வழியில் அனுமதி, உதவி கிடைக்கும்.
பொதுப்பலன்: நல்ல நேரம் வந்தாச்சு என நினைக்கும் அளவிற்கு 2025 முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். இதுவரை நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். செல்வாக்கு உயரும். நினைப்பது நடந்தேறும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடிவரும்.
மேற்படிப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், வேலை, சொந்த வீடு, பட்டம், பதவி என்ற முயற்சிகள் இப்போது பலனளிக்கும்.
தொழில்: தொழிலில் தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த அனுமதி, கடன் கிடைக்கும். இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, அழகு சாதனம், கவரிங், ஆடை ஆபரணம், பில்டர்ஸ், கலைத்துறை, பைனான்ஸ், ஜூவல்லரி, ஏற்றுமதி இறக்குமதி, ஸ்டேஷனரி, ஷேர் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம்,
கம்ப்யூட்டர் தொழில்களில் ஆதாயம் கூடும். விவசாயம், கால்நடை வளர்ப்பு லாபம் தரும்.
பணியாளர்கள்: உழைப்பிற்கும் திறமைக்கும் உரிய பலன் கிடைக்கும் வருடமாக இருக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வும், புதிய பொறுப்பும் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வாழ்க்கை நிலை உயரும்.
பெண்கள்: பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் செல்வாக்கு உயரும். படிப்பில் முன்னேற்றம். எதிர்பார்த்த வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என நன்மை அடைவீர்கள். சிலர் சுய தொழிலில் சாதிப்பர். கணவர், பிள்ளைகளிடம் உங்கள் மீதான பாசம் அதிகரிக்கும். அன்பு கூடும். சிலர் செல்வாக்கான பதவியில் அமர்வர். பணியில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த உயர்வும் மாற்றமும் கிடைக்கும். சொத்து, வாகனம், வீடு வாங்குவீர்கள். பொன் பொருள் சேரும்.
கல்வி: பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றியடைவீர்கள். மேற்படிப்பு கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடத்தில் இடம் கிடைக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது மேலும் நன்மை தரும்.
உடல்நிலை: ஆரோக்கியம் உண்டாகும். மருத்துவச் செலவு குறையும். பரம்பரை நோய், தொற்று நோய், சுவாசக் கோளாறு, சிறுநீரக பாதிப்புகள் குறையும். படுக்கையில் இருந்தவர்களும் எழுந்து நடமாடும் நிலை ஏற்படும்.
குடும்பம்: குடும்பத்தை உயர்த்த மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகள், பணியாளர்கள், தொழிலதிபர்கள் என அனைவரின் நிலையும் உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். சொத்து சேரும். சேமிப்பு உயரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர்.
பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை தரிசித்து வாருங்கள். நன்மை அதிகரிக்கும்.
உத்திராடம்: உழைப்பால் உயர்வீர்கள்
ஆத்ம காரகனான சூரியன் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1 ம் பாதமான தனுசில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.
2025 ம் வருடத்தில் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு, விரும்பிய மாற்றம் ஏற்படும். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு உண்டாகும். தடைபட்ட முயற்சிகள் நடந்தேறும். தொழில் விருத்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, வருடத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். நினைத்த வேலைகள் நடந்தேறும். எடுத்த காரியங்கள் முடிவிற்கு வரும். வருடத்தின் பிற்பகுதியில் 2 ம் இடத்தில் சனி, ராகு சஞ்சரித்தாலும் குருவின் பார்வைகளால் குடும்பம், தொழில் முன்னேற்றமடையும். வரவு அதிகரிக்கும்.
சனி சஞ்சாரம்: உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். முயற்சிகள் வெற்றியாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள், தடைகள் நீங்கும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் வீண் பிரச்னைகள் தோன்றும். வரவு செலவு இழுபறியாகும். பண இழப்பு, பொருள் களவு போகுதல் என எதிர்மறையான பலன்கள் ஏற்படும் என்றாலும், பிப். 13 - மார்ச் 29 அஸ்தமன காலத்திலும், ஜூலை 23 - நவ. 18 வக்கிர காலத்திலும் நெருக்கடி நீங்கும். நன்மைகள் நடந்தேறும்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரித்து மே26 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிப்பதால், 1 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 க்குப்பின் 3 ம் இட ராகுவும் 9 ம் இட கேதுவும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை மேன்மையான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகம், குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். மே 26 க்குப்பின் அனைத்திலும் நிதானம் அவசியம். சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் நன்மை தரும்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர் அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால், 1 ம் பாதத்தினருக்கு மே 10 வரை குருவின் பார்வைகளாலும், மே 11 முதல் 7 ம் இட சஞ்சாரத்தினாலும் நன்மை வழங்குவார். தொழில், வேலை, புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்வி, திருமணம், குழந்தை, சொந்த வீடு, வாகனம் என்ற கனவுகள் நனவாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் 5 ம் இட குருவினாலும், பிற்பகுதியில் அவருடைய பார்வைகளாலும் நினைப்பது நடந்தேறும். செல்வாக்கு உயரும். தேவை பூர்த்தியாகும். வியாபாரம், தொழில், உத்தியோகம் முன்னேற்றம் பெறும்.
சூரிய சஞ்சாரம்: உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிப். 13 - மார்ச் 14, மே15 - ஜூன் 14, காலங்களிலும், செப்.17 - நவ.16 காலத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மார்ச் 15 - ஏப். 13, ஜூன் 15 - ஜூலை 16 காலங்களிலும், அக். 18 - டிச.15 காலத்திலும், 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் தடைகளை நீக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றம் தருவார். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் லாபத்தை அதிகரிப்பார். உடல் பாதிப்பு, வியாபாரத்தில் போட்டி, எதிர்ப்பு, பகை என்ற நிலையை மாற்றுவார். இழுபறி வழக்கை சாதகமாக்குவார். வேலைக்கான முயற்சியை வெற்றியாக்குவார். தொழில் தொடங்க வழிகாட்டுவார்.
பொதுப்பலன்: 2025 ம் ஆண்டில் சிலருக்கு சனி, ராகு, குருவும், சிலருக்கு ராகு, குருவும் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். முயற்சி வெற்றியாகும். திருமணம், வேலை, தொழில் என வயதிற்கேற்ற பலன் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். பொருளாதாரம் உயரும். உங்கள் நிலை முன்னேற்றமடையும்.
தொழில்: தொழிலில் இருந்த தடைகள் விலகும். வருமானம் உயரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் தொழில்கள், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகத்தில் ஆதாயம் கூடும்.
பணியாளர்கள்: நீண்டநாள் கனவு நனவாகும். தனித்திறன் வெளிப்படும். வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். நிர்வாகத்திடம் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வும், புதிய பொறுப்பும், அரசு ஊழியர்களுக்கு அதிகாரியின் ஆதரவும், எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வும் கிடைக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மேற்படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம். குழந்தை என்ற கனவோடு இருப்பவர்கள் எண்ணம் நிறைவேறும். சிலர் சுய தொழிலில் சாதிப்பர். கணவரின் அன்பு கூடும். சொத்து, வாகனம், வீடு வாங்குவீர்கள். பொன் பொருள் சேரும்.
கல்வி: படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். தேர்வு வரையில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது.
உடல்நிலை: உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவத்தால் குணமாகும். மன அழுத்தம், உறக்கமின்மை, அல்சர், கேஸ்டிக், பரம்பரை நோய் என ஏதேனும் பாதிப்பு உண்டாகும். மருத்துவச்செலவு கூடும்.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகி எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். சொத்து சேரும். சேமிப்பு உயரும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர்.
பரிகாரம்: அபிராமியை வழிபட்டு வர சங்கடம் நீங்கும். நன்மை நடந்தேறும்.