பதிவு செய்த நாள்
11
ஜன
2025
04:01
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம்
எதிலும் திறமையாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். பாக்ய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சூரியன் சஞ்சரிப்பதால் கடந்த மாத நெருக்கடி குறையும். நீங்கள் நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குலதெய்வத்தின் அருளால் தடைபட்ட வேலையெல்லாம் நடக்கும். அரசு பணியில் இருக்கும் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முடிந்தவரை கவனமாக இருக்கவும், நியாயமாக செயல்படுவதும் நன்மையை அதிகரிக்கும். இல்லையெனில் மேலதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். விரய ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டாவதால் புதிய இடம், வீடு வாங்கும் யோகம் ஏற்படும். நீண்ட காலமாக விற்பனையாகாமல் இருந்த இடத்தை விற்பனை செய்வீர்கள். மாதத்தின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரனின் சஞ்சாரம் மாதத்தின் முற்பகுதியில் எதிர்மறையாக இருப்பதால் பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாலினர் விவகாரத்தில் முடிந்தவரை எச்சரிக்கையாக இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது அதன் விளைவுகள் பற்றி யோசித்து சாத்தியப்பட்டதை மட்டும் செய்வது நல்லது. வெளிநாட்டு முயற்சி இம்மாதம் உங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் சிரமம் பாராமல் செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 26.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 19, 24, 28. பிப். 1, 6, 10.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
ரோகிணி: தெளிவான சிந்தனையுடன், வாழ்வின் நிலையினை உணர்ந்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். எதிலும் நிதானம் காப்பதும், பின்விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவதும் நல்லது. ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்து வரும் சனி பகவான் உங்கள் செயல்களுக்கும், முயற்சிக்கும் ஏற்ப பலன்களை வழங்குவார். அரசு பணியில் இருப்பவர்கள் முடிந்தவரை நேர்மையாக செயல்படுவது நல்லது. இல்லையெனில், மெமோ இடமாற்றம் போன்றவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்து வருவதால் எதிர்பார்த்த வரவு வரும். தொழில் முன்னேற்றமடையும். வெளிநாட்டு தொடர்பு லாபத்தை ஏற்படுத்தும். குடும்பத்திலிருந்த நெருக்கடி விலகும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வழக்கு விவகாரம் இழுபறியாகும். பிப். 6 முதல் புதன் பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வேலைகள் முடியும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடி வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றி வருவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வேலை வாய்ப்பிற்காக முயற்சி மேற்கொண்டு வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
சந்திராஷ்டமம்: ஜன. 27.
அதிர்ஷ்ட நாள்: ஜன.15, 20, 24, 29. பிப். 2, 6, 11.
பரிகாரம்: திங்களூர் சந்திர பகவானை வழிபட மனம் தெளிவடையும். வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: இடைவிடா முயற்சியும், நினைத்ததை சாதிக்கும் ஆற்றலும் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிக்கு விரயாதிபதியும், சப்தமாதிபதியும், நட்சத்திராதிபதியுமான செவ்வாய் மாதம் முழுவதும் வக்ரமாகவே சஞ்சரிக்கிறார். பிப்ரவரி 11 வரை குரு பகவானும் ராசிக்குள் வக்ரமாக சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கடந்த மாதத்தை விட இந்த மாதம் உங்களுக்கு நன்மை அதிகரிக்கும். சூரியன் அஷ்டம ஸ்தானத்தை விட்டு விலகி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்கள் தொடர்பு கிடைக்கும். அதன் வழியாக நினைத்ததை சாதித்துக்கொள்வீர்கள். வம்பு வழக்குகள், சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். லாப ராகு உங்களுக்குத் தேவையான வருமானத்தை வழங்குவார். ஒரு சிலருக்கு சேமிப்பு உயரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. சுக்கிரன் ஜனவரி 28 வரை உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கி வந்தாலும் அதன்பின் சாதகமாக சஞ்சரித்து நன்மைகளை அதிகரிப்பார். அதனால், குடும்பத்திலும், மனதிலும் நிம்மதி இருக்கும். பொன் பொருள் சேரும். இடையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இணக்க நிலை உண்டாகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வீர். அவர்களுடைய கல்வி, எதிர்காலம், வேலை வாய்ப்பு என்ற சிந்தனை உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அதற்குரிய வேலைகளை முன்னெடுப்பீர். ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கேற்ப லாபமடைவீர்கள். இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 27, 28.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 18, 24. பிப். 6, 9.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.