Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்கவயலில் அரசாளும் கன்னிகா ... மலை மீது இருக்கும்  சூரிய மல்லேஸ்வரா கோவில் மலை மீது இருக்கும் சூரிய மல்லேஸ்வரா ...
முதல் பக்கம் » துளிகள்
மஹா சிவராத்திரியில் தரிசனம் தரும் பாம்பு: வேண்டிய வரம் தரும் மஹா கணபதி
எழுத்தின் அளவு:
மஹா சிவராத்திரியில் தரிசனம் தரும் பாம்பு: வேண்டிய வரம் தரும் மஹா கணபதி

பதிவு செய்த நாள்

20 மே
2025
12:05

பெங்களூரு ஜே.சி., நகர் பிரதான சாலையில், எம்.ஆர்.பாளையா எனும் முனிரெட்டிபாளையா ஆரம்ப சுகாதார மகப்பேறு மருத்துவமனை முன்பு கிழக்கு திசையை நோக்கி மஹா கணபதி கோவில் உள்ளது. அரச மரத்தின் அருகில் வீற்றிருந்த விநாயகருக்கு, 1964ல் கோவில் கட்டப்பட்டது. ஒன்றரை அடியில் இருந்த சிலைக்கு பின்புறம், 6 அடி உயரத்தில் மஹா கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மனமுருகி வேண்டுவோரை மஹா கணபதி கைவிட்டதில்லை.

புத்திர பாக்கியம்

சங்கடஹர சதுர்த்தியின் போது, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, பூஜையில் பங்கேற்கின்றனர். பல ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாத தம்பதியர் இங்கு வந்து வேண்டி சென்றால், அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கிறது. அதுபோன்று திருமணம் ஆகாதவர்களுக்கும் கணபதி அருள்பாலிக்கிறார். இக்கோவிலேயே திருமணம் வைபவம் நடக்கிறது. இங்கு திருமணம் செய்தோர் அனைவரும் சந்தோஷமாக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியின் போது, இக்கோவில் தேர் உட்பட பல கோவில்களில் இருந்து நுாற்றுக்கணக்கான தேர்கள் பவனி வருகின்றன. தேவகவுடா கர்நாடக முதல்வராக இருந்தபோது, இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதன்பின், அடுத்த மூன்று மாதங்களில், நாட்டின் பிரதமராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

பஞ்சமுக வடிவம்

விநாயகர் சன்னிதியின் அருகில் சிவன், 6 அடி உயரத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் கோலத்தில் அருள்பாலிக்கிறார். 6 அடி உயரத்தில் பஞ்சமுக வடிவில் சிவன் காட்சி அளிக்கிறார். மஹா சிவராத்திரி அன்று இப்பகுதியில் நடக்கும் ஊர்வலத்திலும் நுாற்றுக்கணக்கான தேர்கள் பவனி வருகின்றன. அன்றைய தினம், கோவிலில் உள்ள அரச மரத்தின் கீழ் பகுதியில், பக்தர்களுக்கு பாம்பு தரிசனம் கொடுக்கிறது. பூஜை முடியும் வரை இங்கு இருக்கும். அதன் பின், மரத்தின் மீது ஏறி மறைந்து விடும். பாம்பு வந்ததற்கான தடயமே இருக்காது. தேடி பார்த்தாலும் கண்ணுக்கு தென்படாது.

இம்மரத்தின் கீழ் பகுதியில் நாகதேவதை விக்ரஹம் உள்ளது. இதை வணங்கினால் நாகதோஷத்தை போக்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். மஹா கணபதி சன்னிதியின் இடதுபுறத்தில் நவக்கிரஹம் உள்ளது. கோவில் மேலாளர் ராஜண்ணா, பொருளாளர் பாலகிருஷ்ணா, செயலர் சங்கர்ராஜ் உட்பட நிர்வாகிகளும்; கோவில் பிரதான அர்ச்சகர் பனீந்திர சர்மா, அவரது மகன் ஆகாஷ் சர்மா பி.யு.சி., முதலாம் ஆண்டு படித்து கொண்டே பூஜைகள் செய்து வருகின்றனர். கோவிலில் மஹாகணபதி, பஞ்சலிங்கேஸ்வரருக்கு 21 அடி உயரத்தில் இரு விமான கோபுரம் கட்டப்பட்டு உள்ளது. நவக்கிரஹத்துக்கும் 21 அடியில், பக்தர்களின் கைங்கர்யத்தில் விமான கோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இக்கோவில் பூஜையில் பங்கேற்க, பொருளாளர் பாலகிருஷ்ணாவை, 63608 99601 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்டாஜலபதி கோயிலில் தினமும் அதிகாலை பெருமாள் சுப்ரபாதம் கேட்டு எழுந்தருள்வார். அப்போது ... மேலும்
 
temple news
பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டி, பரபரப்பான வர்த்தக மையமாகும். இப்பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள், ... மேலும்
 
temple news
தேய்பிறை அஷ்டமி கால பைரவரை வழிபட சிறந்த நாள். பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே ... மேலும்
 
temple news
ராபர்ட்சன்பேட்டை இரண்டாவது கிராஸில் கிங் ஜார்ஜ் அரங்கம் அருகே, கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar