Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : ஆனி ராசி பலன் தனுசு : ஆனி ராசி பலன் தனுசு : ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
விருச்சிகம் : ஆனி ராசி பலன்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : ஆனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
03:06

விசாகம் 4ம் பாதம் 
கால நேரம் அறிந்து செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஆனி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திராதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பின்விளைவு பற்றி யோசித்து முடிவிற்கு வர வேண்டும். அவசர வேலைகளால் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். குருவின் பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் விரயச்செலவு கட்டுப்படும்.  குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் பாதிப்புகள் நீங்கும். மனதில் நிம்மதி ஏற்படும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கேதுவால் வியாபாரம் தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். அரசுவழியில் நெருக்கடி, சங்கடம், பிரச்னை தோன்ற வாய்ப்புண்டு. வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோருக்கு இக்காலத்தில் பாதிப்புண்டாகும். வழக்கை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அரசு பணியாளர்கள் தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதும்,  விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். மனதில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். கவனமாக செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 25.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 21, 27, 30. ஜூலை 3, 9, 12.
பரிகாரம்: காலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும்.

அனுஷம்
தைரியம் வீரியம் துணிவு மூலம் எடுத்த வேலைகளை முடிக்கும் சக்தி கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திர அதிபதி சனி சுகஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரித்தாலும் குருவின் பார்வை அங்கு உண்டாவதால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம் விலகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். அஷ்டம குருவின் பார்வைகளால் செலவுகள் கட்டுக்குள் வரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் விவசாயம், உணவகம், மருந்தகம், கெமிக்கல், பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்கள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதத்தின் தொடக்கத்தில் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகள் முடியும். பொருளாதார நிலை உயரும். உறவினர்களின் ஆதரவு உண்டாகும். வேலைகளில் இருந்த நெருக்கடி குறையும். சிலருக்கு புதிய சொத்து சேரும். 
சந்திராஷ்டமம்: ஜூன் 25, 26.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 27. ஜூலை 8, 9.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட சங்கடங்கள் விலகும்.

கேட்டை
எடுத்த வேலையை முடித்திடக்கூடிய திறமை பெற்ற உங்களுக்கு, ஆனி யோசித்து செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி புதன் ஜூன் 22 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விற்க நினைத்தவற்றை விற்கவும் வழி பிறக்கும். எதிர்பார்த்த வரவு இருக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் உடலில் ஏற்பட்ட சோர்வு நீங்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்த வேலைகளை நினைத்தபடி முடிப்பீர்கள் வியாபாரம் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது இக்காலத்தில் அவசியம். முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசித்து முடிவிற்கு வருவது நல்லது. அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். உங்கள் தசா புத்தி சாதகமாக இருந்தால் பாதிப்பு ஏற்படாமல் போகும். பெண்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் சிபாரிசுகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 26, 27.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27. ஜூலை 5, 9, 14.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட்டுவர நன்மை உண்டாகும்.

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar