பதிவு செய்த நாள்
16
செப்
2025
01:09
தெய்வ அருளும் பெரியோர் துணையும் கொண்டு துாய சிந்தனையோடு வாழும் உங்களுக்கு, புரட்டாசி யோகமான மாதம். பாக்ய ஸ்தானத்தில் ஞான மோட்சக் காரகன் சஞ்சரிப்பதால் உலகைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் தெளிவு ஏற்படும். பெரியோர் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். உங்கள் பாக்யாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கலைஞர், வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆன்மிகவாதிகளின் நிலை உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலை நிரந்தரத்திற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் அக். 9 வரை சாதகமாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். உதவி என கேட்பவர்களுக்கு உதவி செய்யும் நிலை உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 17. அக். 14, 15.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 25, 30. அக். 3, 7, 12, 16.
பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட்டு வர சங்கடம் விலகும்.
நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு புரட்டாசி அதிர்ஷ்டமான மாதமாகும். அக்.9 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய வாகனம், நவீன பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். இருப்பதை வைத்து புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உதவி எனக் கேட்டு வருபவர்களுக்கு உதவி புரிவீர்கள். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தைரியம், தன்னம்பிக்கையை அதிகரிப்பார். இதுநாள் வரை மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு இருந்த நிலை மாறி சுயமாக முடிவெடுக்கும் நிலை உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும். மாதம் முழுவதும் புதன் சாதகமாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எடுத்த வேலைகள் நடந்தேறும். அக்.7 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமண வாய்ப்பு உருவாகும். அக்.8 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு விரயச் செலவை கட்டுப்படுத்துவார். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சியை அதிகரிப்பார். எதிர்பார்த்த ஆதாயத்தை வழங்குவார். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். தொல்லைகள் விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும்.
சந்திராஷ்டமம்: செப். 18. அக். 15, 16.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 24, 30, அக். 3, 6, 12.
பரிகாரம் சங்கர நாராயணரை வழிபட மனதில் நிம்மதி உண்டாகும்.
எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் செயல்படும் உங்களுக்கு புரட்டாசி யோகமான மாதமாகும். ஆத்மகாரகன் சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். உங்களை சாதாரணமாக எண்ணியவர்கள் ஆச்சரியப்படும் வகையில் செயல்படுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வழியில் வருமானம் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ராசி நாதனின் சஞ்சாரமும் பார்வைகளும் அக்.7 வரை சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்யத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்தவற்றை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்தவற்றை அடைய முடியும். சேமிப்பு உயரும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கூடும். அக்.8 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், சூரியன், செவ்வாய், ராகு, புதன் என கிரகங்கள் யோகப் பலன்களை வழங்க இருப்பதால் புரட்டாசி நினைத்ததை நடத்திக் கொள்ளும் மாதமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 19. அக். 16.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 28, 30. அக். 1, 3, 10, 12.
பரிகாரம் பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட நன்மை நடந்தேறும்.