விழிப்புடன் செயல்பட்டு முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி யோகமான மாதமாகும். ஞானக்காரகன் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் சமீப காலமாக உங்களுக்கு இருந்த நெருக்கடி, பிரச்னை, போராட்டங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். சமூக அந்தஸ்து உயரும். நீண்ட நாளாக தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற சகோதரர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சில இளைஞர்களின் மனதில் காதல் உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். குடும்பம், தொழில், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும் என்றாலும், புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் போது வில்லங்கம் பார்ப்பதும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் கவனமாக படித்துப் பார்த்து கையெழுத்திடுவதும்,, பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதும் நன்மை தரும்.
நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி நன்மையான மாதமாகும். ஜீவனக்காரகன் சனி வக்கிரம் அடைந்திருந்தாலும் 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு அலைச்சலை அதிகரிக்கலாம். வீடு, வாகனம், நிலம் போன்றவற்றில் திருப்தியற்ற நிலையை ஏற்படுத்தலாம். தாய்வழி உறவுகள் இடையே விரிசல் உருவாகலாம். தனாதிபதி குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எந்தவிதமான நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உங்களுக்கு உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். கையில் எடுத்த வேலையை முடிக்கும் நிலை உண்டாகும். வர வேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி இருக்கும். மாதம் முழுதும் சப்தமாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் கணவன், மனைவிக்கிடையே இணக்கம் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புதிய முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். சிலர் புதிய வாகனம், நகை வாங்குவர். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். அவர்களுக்கு செய்து முடிக்க வேண்டிய பொறுப்புகளை செய்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்க முடியும். ராசிநாதன் அக். 27 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வழியிலும் செலவு ஏற்படும். நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த இடத்தை விற்று பழைய கடனை அடைப்பீர்கள். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தொழில் மீது அக்கறை ஏற்படுத்துவார். அலட்சியம் கொண்ட சிலருக்கு படிப்பினை வழங்கி அதன் வழியே முன்னேற்றத்தை உண்டாக்குவார். சூரியனும் 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் செலவு இருந்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில், பாக்கிய குரு அதற்குரிய வரவுகளையும் மறுபக்கம் வழங்குவார். தற்காலிகமாக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். இந்த மாதம் உங்களுக்கு செலவும் வரவும் கலந்த மாதமாக இருக்கும். கடந்த மாதங்களில் இருந்த நெருக்கடி காணாமல் போகும். ஓரளவிற்கு நிம்மதி காண்பீர்கள்.
சந்திராஷ்டமம்: நவ.9
அதிர்ஷ்ட நாள்: அக்.17, 18, 26, 27, நவ.8, 17
பரிகாரம் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற நன்மை அதிகரிக்கும்.
கேட்டை
எந்த ஒன்றிலும் நிதானத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். வித்யா காரகன் புதன் அக். 27 வரை விருது ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். நினைத்த வேலைகள் நடைபெறாமல் போகும் என்பதால் ஒவ்வொரு வேலையிலும் அக்கறை, யோசித்து செயல்படுவது நல்லது. அக். 27 முதல் புதன் வக்கிரம் அடைவதால் நெருக்கடியில் இருந்து விலகுவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். ஞானக்காரகன் குருவின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிக்கும் அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வரவேண்டிய பணம் வரும். ராசிநாதன் அக். 27 வரை விரய ஸ்தானத்திலும், அதன்பிறகு ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் கவனமாக செயல்படுவது அவசியம். எந்த ஒன்றிலும் இந்த மாதத்தில் அவசரம் வேண்டாம். பின்விளைவு பற்றி யோசித்து அதன் பிறகு வேலையில் இறங்குவதால் நஷ்டம் ஏற்படாது. சங்கடம் இல்லாமல் இருக்கும். பெண்களுக்கு கணவர், குழந்தைகளால் நிம்மதி அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ.10
அதிர்ஷ்ட நாள்: அக்.18,23,27, நவ. 5, 9, 14
பரிகாரம் நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2025 முதல் 16.11.2025 வரை) »