தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். அக்.27 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களை வேகப்படுத்துவார். விவேகத்தை விட வீரம் உங்களிடம் அதிகமிருக்கும். அதனால் சில சங்கடங்களையும் சந்திக்க நேரும். செவ்வாயின் பார்வை உங்கள் ராசிநாதனின் வீடான எட்டாம் இடத்தில் பதிவதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பு கூடும். ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வர வேண்டிய பணம் வரும். செய்துவரும் தொழில் ஆதாயம் தரும். தம்பதிக்குள் ஏற்பட்ட விரிசல் விலகும். குடும்பத்தின் நலன் கருதி இருவரும் இணைந்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். சொத்து சுகம் என்ற கனவு நனவாகும். குருவின் பார்வை சத்ரு ஜெய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் இருந்த போட்டி, எதிர்ப்பு விலகும். விவசாயிகள், ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் ஆதாயம் அடைவர்.
சுவாதி; ஒவ்வொரு வேலையிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு வெற்றி அடையும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். யோக போகக்காரகன் ராகு 5 ல் சஞ்சரிப்பதால் வேலைகளில் இழுபறி ஏற்படும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். பயணத்தில் சங்கடங்கள் நேரும். லாப ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல சங்கடம் எல்லாம் விலகும். வர வேண்டிய பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்தபடியே உங்கள் வேலைகள் நடந்தேறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அக். 27 முதல் குரு மங்கள யோகம் உண்டாவதால் உங்கள் செயல்கள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முதலீட்டில் இருந்து வர வேண்டிய பணம் வரும். பாக்யாதிபதி புதனின் சஞ்சாரம் வெளியூர் பயணத்தை ஏற்படுத்தும். அலுவலர்கள் வேலையின் காரணமாக வீட்டை விட்டு வெளியே தங்க நேரும். ஜீவன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருப்பது நல்லது. பணியாளர்கள் இந்த மாதத்தில் அலட்சியத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். அதனால் நெருக்கடி, பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பெயரும் புகழும் உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்; அறிவும், ஆற்றலும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ஞானக்காரகன் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்து வரும் வேலையில் நெருக்கடி அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். மேலதிகாரிக்கும் உங்களுக்கும் மோதல் உண்டாகும் என்றாலும், குருவின் பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதியான சூழலும், கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய நிலையும் இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். எதிர்ப்பு, நோய் என்றிருந்த நிலை மாறும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். வியாபாரத்தில் போட்டியாக செயல்பட்டவர்கள் உங்களிடம் வந்து சரணடையும் நிலை ஏற்படும். உறவுகளுக்குள் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். ராசிநாதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பாக்கியாதிபதி புதன் அக். 27 முதல் வக்கிரம் அடைவதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் படித்து பார்ப்பது அவசியம். புதிய சொத்து வாங்குபவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது நன்மை தரும். வரவு, செலவில் மாதம் முழுவதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும். சுபநிகழ்ச்சி நடக்கும்.
சந்திராஷ்டமம்: நவ.8
அதிர்ஷ்ட நாள்: அக்.21, 24, 30. நவ. 3, 6, 12, 15
பரிகாரம் முருகப்பெருமானை வழிபட செல்வம் பெருகும்.
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2025 முதல் 16.11.2025 வரை) »