வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பெரிய மனிதரின் ஆதரவும், தெய்வ அருளும் கிடைக்கும். சிலருக்கு கோயில்களுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்ற நேரம் கூடி வரும். யோக, போகக்காரகன் ராகு 3 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். அத்தியாவசிய தேவை நிறைவேறும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில் அபிவிருத்தியாகும். வராமல் இருந்த பணம் வரும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கும் புதிய தொழில் தொடங்குவதற்கும் அனுமதி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். விவசாயம் லாபம் தரும். மருத்துவம் காவல்துறையினருக்கு நெருக்கடி விலகும். அக்.27 முதல் விரயாதிபதி விரய ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் கையிருப்பு பணம் கரையும். செலவுகள் அவசியமானதாக இருக்கும். உடல்நலனில் பிரச்னை ஏற்படாது.
சந்திராஷ்டமம்: நவ.10,11
அதிர்ஷ்ட நாள்:அக்.21, 25, 30, நவ.3,7,12,16
பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.
பூராடம்
தடைகளை தாண்டி வெற்றி நடை போடும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனால் மாதத்தின் தொடக்கத்தில் செலவு அதிகரித்தாலும், நவ. 3 முதல் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவரது பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பணப்புழக்கம் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். விரயச் செலவு கட்டுப்படும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவர். புதிய வீட்டில் குடியேறும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். அக். 27 வரை கல்விக்காரகன் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். கலைத்துறையினர் முன்னேற்றம் காண்பர். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்டிருந்த பணம் வரும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பூமிக்காரகன் செவ்வாயும் அக். 27 வரை வருமானத்தை அள்ளித் தருவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவோர் லாபம் காண்பர். லாப ஸ்தான சூரியன் தொட்டதை துலங்க வைப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார். உங்களை ஜொலிக்க வைப்பார்.
சந்திராஷ்டமம்: நவ.11,12
அதிர்ஷ்ட நாள்:அக்.21,24,30,நவ.3,6,15
பரிகாரம் அகத்தீஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.
உத்திராடம் 1 ம் பாதம்
வாழ்வில் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் உங்களுக்கு, ஐப்பசி லாபமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் பணவரவு அதிகரிக்கும். இதுவரை தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சுய நிறுவனங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர்களின் ஆதரவு உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். அக். 27 வரை செவ்வாய், புதன் சாதகமாக இருப்பதால் பூமி, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். இழுபறியாக இருந்த பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை தள்ளிப்போன வேலைகள் நடந்தேறும். பணவரவு உங்கள் வாழ்க்கையை வளமாக்கும். உங்களின் வளர்ச்சிக்கு பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஐப்பசி உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டமான மாதமாகும்.