பதிவு செய்த நாள்
11
நவ
2025
11:11
சாப விமோசனம் என்பது சாபம், பாவம் அல்லது தீய நிய நிலையில் இருந்து விடுபடுவதை குறிக்கிறது. அறியாமலோ, அறிந்தோ ஒரு தவறை செய்யும்போது பாவம் உருவாகிறது. சாபம் என்ற சொல், தோஷத்துடன் உடன்படுகிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவர் பெற்ற சாபத்தை நீக்கும் வகையில், கோவில் உள்ளது.
சிக்கபல்லாபூரின் குந்தலகுர்கி கிராமத்தில் உள்ள சாபவிமோசனனேஸ்வரா கோவில். இக்கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சாபம் அல்லது தோஷத்தால் பா திக்கப்பட் டோர் இக்கோவிலுக்கு வந்து, சிவனை வழிபட்டு பாலாபிஷேகம் செய்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த கோவிலுக்கு பெங்களூரு, பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், கோலாரில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும், நிறைய பக்தர்கள் வருகின்றனர். வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள், வேதனைகளில் இருந்து விடுபடுவது எப்படி என்று கோவிலில் உள்ள சீனிவாஸ் சுவாமிகள், பக்தர்களுக்கு ஆலோசனை கூறுகிறார். இளம் தலைமுறையினருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும் அவர் ஊக்குவிக்கிறார்.
வாரந்தோறும் திங்கட்கிழமை, பண்டிகை நாட்களில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கோவில் சிறியதாக இருந்தாலும், கோவிலில் இருக்கும் அமைதி, சிவனின் சிலை, சுற்றுப்புறச்சூழல் தங்களை ஈர்ப்பதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.
இக்கோவிலில் இருந்து 16 கி.மீ., துாரத்தில் ஈஷா பவுண்டேஷன் உள்ளது. குந்தலகுர்கி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. பெங்களூரில் இருந்து குந்தலகுர்கி கிராமம் 67 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து சிக்கபல்லாபூர் சென்று அங்கிருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ள கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.