இறைவனை எப்படி வழிபடலாம் என்பதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. இதில் ஒன்றை பக்தர்கள் பின்பற்றினால் போதும்.
1.சுகபிரம்மரிடம் மனம் ஒன்றி கிருஷ்ணரின் பிரபாவங்களைக் கேட்டார் பரீட்சித்து மன்னர். கடவுளின் மகிமையைக் கேட்பதே வழிபாடு தான். 2.சுகபிரம்ம முனிவருக்கு, அவரது தந்தை வியாசர் வேதங்கள் குறித்து சொன்னார். அதைக் கேட்டே சுகப்பிரம்மர் உயர்வெய்தினார். கடவுளைப் பற்றி பிறருக்குச் சொல்வதும் வழிபாடு தான். 3.பிரகலாதன் எந்நேரமும் நாராயணனைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தான். நினைப்பதும் கடவுளை வணங்கும் வழிகளில் ஒன்று. 4.பெருமாளின் பாதங்களுக்கு சேவை செய்தாள் லட்சுமி. இறைவனின் திருப்பாதங்களை பார்த்தாலே போதும். பாத சேவையும் இறைவழிபாட்டு முறை தான். 5.கோயிலிலோ, வீட்டிலோ வழிபடலாம். 6.எந்த இடத்தில் இருந்தாலும், அங்கிருந்தே பிரார்த்தனை செய்யலாம். 7.அவரவர் பணி, தொழிலைக் கூட முதலாளிகளுக்குப் பணிந்து அவர்களின் விருப்பம் போல் செய்து முடிப்பதும் வழிபாடே. ராமனின் கட்டளையை அனுமன் ஏற்றது போல. 8.கடவுளை தன் தாயாக, தந்தையாக, நண்பனாக, உறவாக ஏற்பதும் வழிபாடே. அர்ஜுனன் கிருஷ்ணனை நண்பனாக ஏற்றது போல். 9.இந்த உடலால் செய்யும் ஒவ்வொரு நற்செயலையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கலாம். திருமாலிடம் மகாபலி தன்னையே ஒப்படைத்தது போல.