Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி ராசி பலன்: சிம்மம்.. நினைத்ததை ... ஐப்பசி ராசி பலன்: துலாம் .. லட்சியமும் தெளிவான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு இது யோகமான மாதமாகும்ணா! ஐப்பசி ராசி பலன்: துலாம் .. லட்சியமும் ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
ஐப்பசி ராசி பலன்: கன்னி.. மாற்றத்தையும் ஏற்றத்தையும் சமமாக நினைக்கும் உங்களுக்கு இது நன்மையான மாதம் தான்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி ராசி பலன்: கன்னி.. மாற்றத்தையும் ஏற்றத்தையும் சமமாக நினைக்கும் உங்களுக்கு இது நன்மையான மாதம் தான்!

பதிவு செய்த நாள்

16 அக்
2026
03:10

கன்னி.. உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: எந்த இடத்திலும் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன் நீச்சமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும் என்றாலும், அக். 20 முதல் குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுபச்செலவுகள் கூடும்.  குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவதற்காக சேமிப்பு கரையும். பிள்ளைகளின் கல்விக்காகவும், சொந்த இடம் வீடு வாங்கவும் சிலர் கடன் வாங்கவும் செய்வீர்கள்.  ராசிநாதன் புதன் அக். 31 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் சாதுரியமாக செயல்படுவீர்கள். பிறருக்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெண்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும் என்றாலும் புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பதும் குடும்ப ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதும் நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் லாபம் கூடும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை உருவாகும்.


சந்திராஷ்டமம்: அக். 25, 26.

அதிர்ஷ்ட நாள்: அக். 19, 23, 28. நவ. 1, 5, 10, 14.


பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட தடைகள் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.


அஸ்தம்: வாழ்வின் ஏற்றத்தையும் மாற்றத்தையும் ஒரே சமமாக நினைத்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். உடல் நிலையிலும் மனநிலையிலும் ஏற்பட்ட சங்கடங்களை விலக்குவார். தடைபட்ட வேலைகளை முடித்து வைப்பார். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி பிரச்னைகளை எல்லாவற்றையும் இருந்த இடம் தெரியாமல் செய்வார். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரத்தை உங்களுக்கு சாதகமாக்குவார். தெய்வ நம்பிக்கையை உண்டாகும். பிறரால் உங்களுக்கு வரும் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பார். உறவினர்கள் ஆதரவும் உங்களைப் பாதுகாக்கும் என்றாலும், அக். 20 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு கிடைத்து வந்த குருப்பார்வை விலகுவதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். உங்களுக்கு ஆதரவாக இருந்த நண்பர்கள் கூட இந்த நேரத்தில் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். மனம் குழப்பத்திற்கு ஆளாகும் என்பதால் புதிய நண்பர்களுடன் எச்சரிக்கை அவசியம். உங்க தன குடும்பாதிபதி மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை. குடும்பத்திற்குள் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும். ராசிநாதன் அக். 31 முதல் உங்களைப் பாதுகாப்பார். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வர வேண்டிய பணம் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருவது நன்மையளிக்கும்.


சந்திராஷ்டமம்: அக். 26, 27.

அதிர்ஷ்ட நாள்: அக். 20, 23, 29. நவ. 2, 5, 11, 14.


பரிகாரம்: ஏழுமலையானை வழிபட எண்ணிய எண்ணம் நிறைவேறும். மனதில் நிம்மதி உண்டாகும்.


சித்திரை 1, 2 ம் பாதம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். வேலையாட்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். சகோதரருடன் ஏற்பட்ட வருத்தம் விலகும். முடங்கிக்கிடக்கும். அக். 20 முதல் குருப் பார்வைகளால் தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். எதிர்ப்பு பகை பிரச்சினை என்பதெல்லாம் விலகும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விவகாரம் சாதகமாகும். மறைமுகத் தொல்லைகள் நீங்கும். திடீர் வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் சனி பகவானால் குடும்பத்திற்குள்ளும் நண்பர்களிடையேயும் பிரச்னைகள் உருவாகும் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம். வேலையில் இருப்பவர்கள் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறும் ஆலோசனையின்படி செயல்படுவதால் உங்களுக்கு வரும் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும். வியாபாரிகள் தங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் தாங்களே முன்னின்று செய்து கொள்வதால் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைய முடியும். விவசாயிளுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடையும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது அவசியம்.


சந்திராஷ்டமம்: அக். 27.

அதிர்ஷ்ட நாள்: அக். 18, 23, நவ. 5, 9, 14.


பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar