Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் ...
முதல் பக்கம் » மதுரை சித்திரைப்பெருவிழா!
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவது ஏன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
10:04

வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள். அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால் உருவாக்கப்பட்டது. தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம். கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது. வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால், (பிறவி) கடலையே கடந்து விடலாமே என்று கணக்கு போட்டார். அதற்கேற்றாற்ற போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்துவிட்டது. ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ (தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட, என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது. ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க வேண்டும்! மச்சமாகப் போ (மீனாகமாறு) என சாபம் பெற்றிருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும். அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல் மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார். அவ்வப்போது தரைக்கு வருவார். காரணம் என்ன! எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....அல்லது சாப விமோசனம். ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில் வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்!

பெருமாளின் திருவடியைப் பார்த்தாலே சொர்க்கம்.... ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். பெருமாளின் திருவடியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடுமாம். பார்த்தாலே இப்படி என்றால்.... திருவடி பட்டால் என்னாகும்! அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரையில் ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார். ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே! ""அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய். மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார். நமக்கும் அதே நிலை தான்! இன்று அழகர் ஆற்றிலே இறங்குகிறார். பார்க்க முடியாதவர்களுக்காக நாளையும் வைகைக்குள் இருக்கும் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுவார். அவரது திருவடியைத் தரிசித்தாலே போதும். பூலோகத்திலேயே சொர்க்கத்தைக் காணலாம்.ஆம்...அவரிடம் மனதார பிரார்த்தித்தால் போதும். மழை வேண்டுமென்றால் மழை பெய்யும். பணம் வேண்டுமென்றால் அள்ளித்தருவார். எல்லாம் நாம் அவர் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் இருக்கிறது.

அழகர் வணக்கப்பாடல்

சிந்துரச் செம்பொடி போல்
திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே
எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி யன்று
மதுரக் கொழுஞ் சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான்
சுழலையினின் றுய்துங் கொலோ.

அழகர்கோவில் வரலாறு: ஒருமுறை நியாயஸ்தரான எமதர்மராஜனுக்கே சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலோகத்தில் தற்சமயம் கோயில் இருக்கும் அழகர் மலைக்கு வந்தார். விருசுபகிரி என்னும் பெயர் கொண்ட இம்மலையில் தவம் செய்தார். இந்த மலைத்தொடர் திருப்பதியைப் போல ஏழு மலைகளை கொண்டது. தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் உன்னை ஒரு முறையாவது பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு வேண்டிய, தர்மராஜன் விருப்பத்தின் பேரில் இங்கேயே திருமால் எழுந்தருளினார். விஸ்வகர்மானால் இங்கு சோமசந்த விமானம் (வட்ட வடிவம்) அமைக்கப்பட்டது. சங்கு, சக்கரம், கதை, வில்,வாள் தாங்கிய நிலையில் நின்றதிருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். இவர் ஒரு நீதிமன்றம் : அழகர்கோவிலில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை வணங்கினால் நினைத்தது கைகூடும். இது ஒரு நீதிமன்றம் போல! இவரை சாட்சியாக வைத்து முக்கிய விவகாரங்களை கிராமமக்கள் பேசித் தீர்க்கின்றனர்.

ஏன் தண்ணீர் பீய்ச்சுகிறார்கள்: அழகர் வழிபாட்டில் முக்கியமானது தண்ணீர் பீய்ச்சி அடித்தல். இதன் தாத்பர்யம் என்ன தெரியுமா பெருமாள் கோயிலுக்குப் போனால் நமக்கு தரப்படுவது தீர்த்தம். அழகர் வேடமணிந்த பெருமக்களை நாம் அழகராகவே எண்ண வேண்டும்.அந்தப் பெருமான் நமக்கு தீர்த்தம் வந்தபடியே வருவதாக இதன் ஐதீகம். அழகர் தீர்த்தமும் நம்மை பரமபத வாசலுக்கு அழைத்துச் செல்லக்கூடியது. அதனால் தான் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியபடியே வருகிறார்கள்.

 
மேலும் மதுரை சித்திரைப்பெருவிழா! »
temple news
மதுரை: மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று, (ஏப்.,24ல்)  தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆடுவோம்.... பாடுவோம்... கொண்டாடுவோம்..: மதுரை மக்களின் மண்வாசனை மாறாத மரபுகள் தான், சித்திரை திருவிழாவை பிற ... மேலும்
 
temple news
கல்யாணம் என்றால் விருந்து இல்லாமலா...மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? ... மேலும்
 
temple news
மதுரை அழகர்கோவில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமியையும், அழகர்மலையானையும், குல தெய்வமாகக் கொண்டாடும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar