பதிவு செய்த நாள்
13
ஆக
2013
10:08
சனீஸ்வரரை ஆட்சி நாயகனாக கொண்ட மகரராசி அன்பர்களே!
சனி உச்சம் பெற்று இருந்தாலும் சாதகமாக காணப்படவில்லை. அவரோடு இருக்கும் ராகுவும் நன்மை தரமாட்டார். ஆனால் குரு பார்வை சனி,ராகுமீது இருப்பதால் கெடுபலன் குறையும். பூமிகாரகரான செவ்வாய், செப்.3 ல் 7ம் இடமான கடகத்திற்கு செல்வது நல்லதல்ல. இதனால், அலைச்சல் ஏற்படும். மனதில் வேதனை உருவாகும். மனைவி வகையில் பிரச்னை வரலாம். எதிரிதொல்லை அதிகரிக்கும். கல்விகாரகன் புதன் சிம்மத்தில் இருப்பதால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும். செப்.3ல் இவர் கன்னி ராசிக்கு செல்வது நன்மை தராது. சிலரின் பொல்லாப்புக்கு ஆளாகலாம். உடல் நலம் பாதிக்கப்படலாம். சுக்கிரன் 9ல் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கச் செய்வார். பெண்களால் சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். அதோடு அவரது பார்வையால் நன்மை கூடும். பிரிந்த தம்பதிஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். செப்.8ல், சுக்கிரன் இடம் மாறி துலாம் ராசிக்கு வருகிறார். அப்போது எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். ஆனால், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் கருத்துவேறுபாடு நீங்கி சுமூக நிலை உண்டாகும். குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது 9-ம் இடத்துப் பார்வையால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபவிஷயங்கள் நடந்து கொண்டிருக்கும்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். வாழ்வில் வசதிபெருகும். மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். செப்8க்குப் பிறகு சிரத்தை எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.மாணவர்களுக்கு, புதன் சாதகமாக உள்ளதால் நற்பெயர் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மை தரும். செப்.3க்கு பிறகு அதிக அக்கறையுடன் படிக்க வேண்டியது இருக்கும்
நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 19,20,23,24,25,30,31, செப்.1,2,3,9,10,11,12,15,16
கவன நாட்கள்: செப்.4,5,6
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: பச்சை, வெள்ளை
வழிபாடு: சனிக்கிழமையில் அனுமன், விநாயகரை வழிபடுங்கள். வெள்ளியன்று சிவனை தரிசியுங்கள். வீட்டிலும் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.