Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராகு வேளையில் துர்க்கை, காளியை ... இதை படிச்சாலே மோட்சம் தான்! இதை படிச்சாலே மோட்சம் தான்!
முதல் பக்கம் » துளிகள்
முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஜன
2014
02:01

முருகன்    -அழகன்.
பிள்ளையார்    -சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.
சித்தன்    -அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.
சேயோன்    -செந்நிறம் உடையவன்.
வேள்    -எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் உடையவன்.
வேலன்    -வெற்றி தரும் வேலை உடையவன்.
அரன் மகன்    -சிவனின் புத்திரன்.
அறுமீன் காதலன்    -கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.
அறுமுகன்    -ஆறு முகங்களை உடையவன்.
குரு    -சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் உரைத்தவன்.
கோழிக்கொடியோன்-சேவலைக் கொடியாக உடையவன்.
கங்கை மைந்தன்    -தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.
கடம்பன்    -கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.
கந்தன்    -வலிமையான தோள்களை உடையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன்.
காங்கேயன்    -கங்கை மைந்தன்
கார்த்திகேயன்    -கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.
குகன்    -மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.
குமரன்    -சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.
குழகன்    -அழகன், இளமையானவன்.
குறிஞ்சி வேந்தன்    -மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.
குன்றெறிந்தோன்    -கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.
கவுரி நந்தனன்    -உமாதேவியின் மைந்தன்.
சண்முகன்    -ஆறு முகம் கொண்டவன்.
சரவணபவன்    -நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.
சிலம்பன்    -காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.
சுரேசன்    -துன்பம் நீக்குபவன்.
சூர்ப்பகைவன்    -எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.
செட்டி    -     உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.
சேந்தன்    -சிவப்பு நிறமுடையவன்
சேவற்கொடியோன்-சேவலைக் கொடியில் தாங்கியவன்.
தெய்வானை காந்தன்-தெய்வானையின் கணவன்.
தேவசேனாபதி    -சேனைக்குத் தலைவன்.
பாவகி, பாவகாத்மஜன்    -பரிசுத்தம் உடையவன்.
மஞ்ஞையூர்தி    -மயிலை வாகனமாகக் கொண்டவன்.
மாயோன் மருகன்-திருமாலின் மருமகன்.
வள்ளி மணாளன்    -வள்ளியின் கணவன்.
பாகுலேயன்    -கார்த்திகேயன்.
விசாகன்    -வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.
சங்கத்தலைவன்    -கலைகளை உணர்ந்த புலவன்.
சாமி    -செல்வன்.
முத்தையன்    -முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.
சுப்பிரமணியன்    -வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.

 
மேலும் துளிகள் »
temple news
பகவான் உறங்க ஆரம்பித்தது முதல் எழுந்திருக்கும் வரை ஆற்ற வேண்டிய விரதம் சாதுர் மாஸ்ய விரதம். ஒவ்வொரு ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவி, வெயில் மாவட்டமாக கருதப்படும். இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. ... மேலும்
 
temple news
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் நாடபிரபு கெம்பேகவுடா கிராஸ், 4வது பிளாக் அஜ்வானி ரோட்டில் உள்ளது ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவில்களும், தனித்தன்மை கொண்டது. வழிபாடுகளும் மாறுபட்டவை. இத்தகைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar