Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா? அக்னி நட்சத்திரத்திர  நாட்களில் என்ன செய்யக் கூடாது? அக்னி நட்சத்திரத்திர நாட்களில் ...
முதல் பக்கம் » துளிகள்
கோடையின் தாக்கத்தை நீக்கும் முத்திரை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 மே
2014
03:05

பருவ நிலையில் மாற்றம் ஏற்படும் போது நமது உடலிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் மாறுதல்களை எளிய முத்திரைகளின் மூலமே சரிசெய்துகொள்ள முடியும். கோடையின் தாக்கங்களை சமாளிக்கும் சில எளிய முத்திரைகளில் ஒன்று வருண முத்திரை. இந்த வருண முத்திரையின் வழியாகவே கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களை சரிசெய்துகொள்ள முடியும். நோய் உருவாகும் வரையில் காத்துக்கொண்டிராமல் கோடையின் துவக்கத்திலேயே இந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்துவந்தால் வெயிலினால் உருவாகும் சிக்கல்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.

பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. ஒரு பூதத்தில் ஏற்படும் மாற்றங்கள் பிற பூதங்களிலும் மாற்றங்களை உருவாக்கும். கோடை காலத்தில் நிலத்திலுள்ள நீர் குறைவதால் நிலம் வெடித்து தரிசாகி விடுகிறது. நமது உடலை எடுத்துக் கொண்டால் கோடையின் வெப்பத்தால் உடல் சூடு அதிகரிக்கும். நெருப்பு எனும் பூதம் அதிகமாகும். இந்த சூட்டைக் (நெருப்பை) குறைக்க வியர்வை என்னும் நீர் அதிகமாக உற்பத்தியாகும். இந்த இரு மாற்றங்களுமே பல கோடைகால பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணங்களாகின்றன. உடலிலுள்ள நீர் வியர்வை வழியாக வெளியேறி, உடலில் நீரின் அளவு குறைந்துபோவதால் நீர்க்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் உருவாகிவிடுகின்றன. எனவே, கோடை காலத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்ய நெருப்பின் அளவை உடலில் குறைக்க வேண்டும் அல்லது நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். நெருப்பின் அளவை நேரடியாகக் குறைத்தால் இதயத்தின் இயக்கங்கள் பாதிக்கப்படும். எனவே நீரின் அளவை சமன்செய்வதே சரியான தந்திர யோக வழியாகும். அதற்கான முத்திரையே வருண முத்திரை!

எவ்வாறு செய்ய வேண்டும்?:
* பெருவிரலை வளைத்து, ஐந்தாவது விரலின் (சிறுவிரல்) நுனிப் பகுதியோடு இணையுங்கள்.
* சுட்டு விரல், நடுவிரல், மோதிர விரல் மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.

அமரும் முறை: * பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம்.
* ஆசனம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம்.
* கால்களை மடக்கி தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
* எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்.
* கவனம் முழுவதும் செய்யும் முத்திரையின்மீது பதிந்திருக்கட்டும்.

சுவாசம்: இயல்பான, சீரான சுவாசம், மூச்சை அடக்குதல் (கும்பகம்) கூடாது.

எவ்வளவு நேரம்?: * குறைந்தபட்சம்  24 நிமிடங்கள்.
* காலையில் 12 நிமிடங்கள், மாலையில் 12 நிமிடங்கள் என பிரித்தும் செய்யலாம்.
* உடற்சூடு மிக அதிகமாக உள்ளவர்கள் அதிகபட்சமாக 48 நிமிடங்கள் வரையிலும் (ஒரு நாளில்) செய்யலாம்.
* ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது கடினமாக இருக்கும்.
* காலையில் 16 நிமிடங்கள், மதியம் 16 நிமிடங்கள், மாலை அல்லது இரவில்16 நிமிடங்கள் என மூன்று வேளையும் சேர்த்து 48 நிமிடங்கள் செய்யுங்கள்.

செய்வதால் என்ன பலன்?:
1. உடற் சூடு தணியும்
2. உடலில் நீர் எனும் பூதம் சமநிலையை அடையும்.
3. கோடையினால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரிசெய்யப்படும்.
4. வியர்க்குரு மறையும்.
5. சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.
6. தோல் வறட்சி மறைந்து, தோல் மறைந்து, தோல் மினுமினுப்பாகும்.
7. தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.
8. இளமையான தோற்றம் உருவாகும்.
9. தாகம் தணியும்.
10. உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar