பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
03:06
மகாகவி காளிதாஸர், சரீரம் ஆத்யம் கலு தர்மஸாதனம் (நல்ல காரியங்கள் செய்வதற்கு அடிப்படையான தேவை என்பது நல்ல உடல்நலமே) என்று, நமது உடல்நலத்தின் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்துகிறார். ஆதலின், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் மனதுக்குத் தகுந்தாற்போல விரதங்களைக் கடைப்பிடிக்கலாம்.
விரதம் எனில் கட்டுப்பாடு. ஆதலின் குழந்தைகளுக்கு சிறிய அளவில் அவர்களுக்கு இயன்றாற்போல் விரதங்களைப் பழக்கினோமானால், அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து, வாழ்க்கையில் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இனிமையாக வாழ்வார்கள். பொதுவாக. எட்டு வயது முதற்கொண்டு எண்பது வயது வரையில் விரதங்களை மேற்கொள்ளலாம். எனினும், அவரவர் உடல்நலத்துக்கு ஏற்றவாறு விரதங்களைக் கடைப்பிடிக்கலாம் என்றும் நமது சாஸ்திரங்கள் தெளிவுபடுத்துகின்றன. விரதங்கள் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல், மனநலனுக்கும் உறுதுணையாக இருக்கிறது. தற்கால சமுதாயத்தில், பல விதங்களில் மனச் சிதறல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் நிலவி வருவதால், சிறுவர் - சிறுமியர்களுக்கு விரதங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கடைப்பிடிக்க வைப்பது நலமே!