பதிவு செய்த நாள்
10
ஜூன்
2015
12:06
பெற்றோர் மீது பாசம் மிக்க மீன ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் ஜூலை 2 வரையிலும், புதன் ஜூன் 28க்கு பிறகும் ஜூலை15-ந் தேதி வரையிலும் நன்மைகளை தருவார்கள். சூரியன் 16ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறினாலும் நன்மை கிடைக்க வாய்ப்பில்லை. குரு பகவான் ராசிக்கு ஜூலை 5ல் 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். குரு சாதகமற்று இருந்தாலும், அவரது 9-ம் இடத்து பார்வையால் நன்மை உண்டாகும். முயற்சியில் தடைகள் குறுக்கிட்டாலும் அதை முறியடித்துவிடுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை நன்றாக இருக்கும். குடும்பத்தில் விருந்து விழா என சென்று வருவீர்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். ஜூன் 28 வரை பகைவர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும்.
பணியாளர்கள் மாத முற்பகுதியில் வேலையில் கவனமுடன் இருக்கவும். ஜூன் 28க்கு பிறகு எதிர்பார்த்த சலுகை நிறைவேறும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
கலைஞர்கள் சிறப்பான நிலை காண்பர். புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். அரசிடம் இருந்து விருது கிடைக்கப் பெறுவர். ஜூலை 2க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு சுமாரான நிலை காண்பர்.
மாணவர்கள் ஓரளவு முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். ஜூன் 28க்கு பிறகு புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டியில் வெற்றி காண்பீர்கள்.
விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர்.
நல்ல நாள்: ஜூன் 16, 24, 25 ஜூலை 1, 2, 3, 4, 5, 8, 9, 12, 13
கவன நாள்: ஜூன் 26, 27, 28 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1, 5 நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: முருகனை வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.