மலைகளில் குவிந்துள்ள மாசற்ற சூழலும், அமைதியும், மனதை தாலாட்டும், பசுமையும், ஆற்றல் அருளும் மூலிகை வாசமும், அருவியும், தீர்த்தமும், உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதம் அருள்பவைகள். எனவே மாதம் ஒரு மலை ஏற்றம் மனதிற்கு புத்துணர்ச்சியை தரும்,” என்கிறார் சுவாமி ராமுஜி. இவர் ‘அவசியம்’ எனும் ஆரோக்கிய ஆன்மிக அமைப்பின் நிறுவனர். மாதம் ஒரு மலையேற்றம் மூலம் தியானமும், யோகமும் ஒருங்கே கற்பித்து வருகிறார். மதுரையில் வியாழன் தோறும் சித்தர் வழிபாடு நடத்தி வருகிறார். காலை 6 முதல் 8.30 மணிக்குள் இரண்டரை மணி நேரத்தில் மதுரை சுற்றிலும் 13 சித்தர் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபட ஏற்பாடுகளை செய்து வருகிறார். வீடுகள், தொழிற்சாலைகள், கோயில்களில் இலவச திருவிளக்கு பூஜைகளை அவசியம் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். இலவச திருவிளக்கு பூஜைக்கு 94877 89158 ல் அழுத்தலாம்.