அஸ்வமேத யாகம் நடத்திய மகாபலி சக்கரவர்த்தியிடம் தானம் பெற, மகாவிஷ்ணு குள்ள வடிவில் வாமனராக எழுந்தருளினார். வந்திருப்பவர் விஷ்ணு என்பதை உணர்ந்த மகாபலி, அவரது திருவடியில் சரணடைந்தான். அவனுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த வாமனர், சிரஞ்சீவியாக வாழும் பாக்கியத்தை வழங்கினார். வேதாந்த தேசிகனால் இயற்றப்பட்ட தசாவதார ஸ்தோத்திரம், குருவுக்குரிய அதிபதியாக வாமன மூர்த்தியைக் குறிப்பிடுகிறது. இவரை மனதில் தியானித்து, ‘ஓம் ஸ்ரீவாமன மூர்த்தியே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை தினமும் ஜெபித்து வந்தால், குருதோஷத்தால் ஏற்படும் சிரமம் அனைத்தும் தீரும் என்பர்.