கேரளத்தின் பெருமையை நிலைநாட்டும் பண்டிகை திருவோணம். மகாபலி மன்னனை வாமனர் ஆட்கொண்டதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகாபலியை வரவேற்கும் விதத்தில் வீடுகளில் பலவித மலர்களாலான கோலம் இடுவர். இதில் தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன்கிரீடம், சேதிப்பூ இடம்பெறும். வாசலில் இடும் பூக்கோலத்தால் நறுமணம் கமழ்வது போல ஆண்டு முழுதும் மக்களின் மனதில் மகிழ்ச்சி மலர்ந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கோலமிடுகின்றனர். கேரள பண்பாட்டுச் சின்னமாக பூக்கோலம் திகழ்கிறது.