ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளியன்று சுமங்கலிகள் மேற்கொள்வது வரலட்சுமி விரதம். இந்நாளில் பூஜைஅறையில் மாக்கோலமிட வேண்டும். லட்சுமியை மலர்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். நிறைகுடத்தில் தேங்காய், மாவிலை, லட்சுமியின் மஞ்சள் முகம் ஆகியவை வைத்து லட்சுமியை ஆவாஹனம் செய்ய வேண்டும். பூஜையின் முடிவில், மூத்த சுமங்கலிகள் மற்ற பெண்களின் வலது கையில் மஞ்சள் கயிறு கட்டி விட வேண்டும். கட்டும் போது, நவ தந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி சமன்விதம் பத்றீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபேஎன்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இயலாதவர்கள்,நாராயணரின் மனைவியான லட்சுமியே! ஒன்பது இழைகளும், ஒன்பது முடிச்சும் கொண்ட இந்த மஞ்சள் கயிறினைபிரசாதமாக ஏற்று வலக்கையில் கட்டுகிறேன். எனக்கு நீ அருள்புரிய வேண்டும், என்று சொல்ல வேண்டும்.இந்த விரதம் மேற்கொண்டால் லட்சுமி தாயாரின் அருளால், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.