நெல்லிமரம் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. ஹரிபலம் என்றும் இதற்குப் பெயருண்டு. வீட்டில் நெல்லி மரம் வைத்தால் லட்சுமியின் அருள் உண்டாகும் என்பது ஐதீகம். இதனால் வீட்டில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் கிடைப்பதுடன், புண்ணியமும் சேரும். ஆனால், இதனை இரவு நேரத்தில் உண்பது கூடாது என்கிறது சாஸ்திரம். நெல்லி மரத்தின் நிழலில் அன்னதானம் செய்வது சிறப்பு. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாளான துவாதசியன்று நெல்லிக்காயை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வர். நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லது. தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து துவையலும் அரைக்கலாம். ஊறுகாயை தவிர்ப்பது நல்லது.