சிவபெருமானை பொதுவாக சிவலிங்க வடிவத்திலேயே வணங்குவதை பார்த்திருப்போம். ஆனால் அவருக்கு 64 வடிவங்கள் இருக்கின்றன. அவற்றில் 12 வடிவங்கள் மிக குறிப்பிடத்தக்கவையாக கருதப்படுகின்றன. அவை 1. அண்ணாமலேஸ்வரர், 2. சந்திரசேகரர், 3. தட்சிணாமூர்த்தி, 4. சோமாஸ்கந்தர், 5. அர்த்த நாரீஸ்வரர், 6. கங்காதரர், 7. பிட்சாடனர், 8. கஜசம்ஹாரர், 9. வீரபத்திரர், 10. பைரவர், 11. காலசம்ஹாரர், 12. நடராஜர்.