Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடைக்காட்டுச் சித்தர் குதம்பைச் சித்தர் குதம்பைச் சித்தர்
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
அகப்பேய்ச் சித்தர்
எழுத்தின் அளவு:
அகப்பேய்ச் சித்தர்

பதிவு செய்த நாள்

23 நவ
2015
03:11

1. நஞ்சுண்ண வேண்டாவே    அகப்பேய்!
நாயகன் தாள்பெறவே    
நெஞ்சு மலையாதே    அகப்பேய்!
நீஒன்றுஞ் சொல்லாதே.

2. பராபர மானதடி    அகப்பேய்!
பரவையாய் வந்ததடி
தராதலம் ஏழ்புவியும்     அகப்பேய்!
தானே படைத்தபடி

3. நாத வேதமடி        அகப்பேய்!        
நன் நடம் கண்டாயோ?
பாதஞ் சத்தியடி        அகப்பேய்!
பரவிந்து நாதமடி

4. விந்து நாதமடி        அகப்பேய்!
மெய்யாக வந்ததடி:
ஐந்து பெரும்பூதம்    அகப்பேய்!
அதனிடம் ஆனதடி.

5. நாலுபாதமடி
நன்னெறி கண்டாயே:    அகப்பேய்!
மூல மானதல்லால்
முத்தி அல்லவடி        அகப்பேய்!

6. வாக்காதி ஐந்தடியோ
வந்த வகைகேளாய்:    அகப்பேய்!
ஒக்கம் அதானதடி
உண்மையது அல்லவடி.    அகப்பேய்!

7. சத்தாதி ஐந்தடியோ
சாத்திரம் ஆனதடி;    அகப்பேய்!
மித்தையும் ஆகுமடி
மெய்யது சொன்னேனே    அகப்பேய்!

8. வசனாதி ஐந்தடியோ    அகப்பேய்!
வண்மையாய் வந்ததடி;
தெசநாடி பத்தேடி        
திடன்இது கண்டாயே.    அகப்பேய்!

9. காரணம் ஆனதெல்லாம்
கண்டது சொன்னேனே;    அகப்பேய்!
மாரணங் கண்டாயே    
வந்த விதங்கள் எல்லாம்    அகப்பேய்!

10. ஆறு தத்துவமும்    அகப்பேய்!
ஆகமஞ் சொன்னதடி;
மாறாத மண்டலமும்    அகப்பேய்!
வந்தது மூன்றடியே.

11. பிருதிவி பொன்னிறமே    அகப்பேய்!
பேதைமை அல்லவடி
உருவது நீரடியோ    அகப்பேய்!
உள்ளது வெள்ளையடி.

12. தேயு செம்மையடி    அகப்பேய்!
திடனது கண்டாயே.
வாயு நீலமடி        அகப்பேய்!
வான் பொருள் சொல்வேனே.

13. வான மஞ்சடியோ    அகப்பேய்!
வந்தது நீ கேளாய்;
ஊனமது ஆகாதே    அகப்பேய்!
உள்ளது சொன்னேனே

14. அகாரம் இத்தனையும்    அகப்பேய்!
அங்கென்று எழுந்ததடி;
உகாரங் கூடியடி        அகப்பேய்!
உருவாகி வந்ததடி

15. மகார மாயையடி    அகப்பேய்!
மலமது சொன்னேனே;
சிகார மூலமடி        அகப்பேய்!
சிந்தித்துக் கொள்வாயே

16. வன்னம் புவனமடி    அகப்பேய்!
மந்திர தந்திரமும்;
இன்னமும் சொல்வேனே    அகப்பேய்!
இம்மென்று கேட்பாயே

17. அத்தி வரைவாடி    
ஐம்பத்தோர் அட்சரமும்    அகப்பேய்!
மித்தையாங் கண்டாயே
மெய்யென்று நம்பாதே.    அகப்பேய்!

18. தத்துவம் ஆனதடி    
சகலமாய் வந்ததடி;    அகப்பேய்!    
புத்தியுஞ் சொன்னேனே
பூத வடிவலவோ?    அகப்பேய்!

19. இந்த விதங்களெல்லாம்
எம்இறை அல்லவடி    அகப்பேய்!
அந்த விதம்வேறே
ஆராய்ந்து காணாயோ?    அகப்பேய்!

20. பாவந் தீரவென்றால்
பாவிக்க லாகாதே;    அகப்பேய்!
சாவதும் இல்லையடி
சற்குரு பாதமடி        அகப்பேய்!

21. எத்தனை சொன்னாலும்    
என் மனந் தேறாதே!    அகப்பேய்!
சித்து மசித்தும் விட்டே    
சேர்த்து நீ காண்பாயே.    அகப்பேய்!

22. சமய மாறுமடி    
தம்மாலே வந்தவடி    அகப்பேய்!
அமைய நின்றவிடம்    
ஆராய்ந்து சொல்வாயே.    அகப்பேய்!

23. ஆறாரும் ஆகுமடி    
ஆகாது சொன்னேனே    அகப்பேய்!
வேறே உண்டானால்    
மெய்யாது சொல்வாயே.    அகப்பேய்!

24. உன்னை அறிந்தக்கால்    அகப்பேய்!
ஒன்றையும் சேராயே.
உன்னை அறியும்வகை    அகப்பேய்!
உள்ளது சொல்வேனே.

25. சரியை ஆகாதே    
சாலோகங் கண்டாயே    அகப்பேய்!
கிரியை செய்தாலும்    
கிட்டுவது ஒன்றுமில்லை.    அகப்பேய்!

26.யோகம் ஆகாதே    
உள்ளது கண்டக்கால்;    அகப்பேய்!
தேக ஞானமடி        
தேடாது சொன்னேனே.    அகப்பேய்!

27. ஐந்தலை நாகமடி    
ஆதாயங் கொஞ்சமடி    அகப்பேய்!
இந்த விடந்தீர்க்கும்    
எம்இறை கண்டாயே.    அகப்பேய்!

28. இறைவன் என்றதெல்லாம்     
எந்த விதமாகும்?        அகப்பேய்!
அறைய நீ கேளாய்
ஆனந்த மானதடி.    அகப்பேய்!

29. கண்டு கொண்டேனே
காதல் விண்டேனே    அகப்பேய்!
உண்டு கொண்டேனே
உள்ளது சொன்னாயே.    அகப்பேய்!

30. உள்ளது சொன்னாலும்
உன்னாலே காண்பாயே.    அகப்பேய்!
கள்ளமுந் தீராதே
கண்டார்க்குக் காமமடி.    அகப்பேய்!

31. அறிந்து நின்றாலும்
அஞ்சார்கள் சொன்னேனே;    அகப்பேய்!
புரிந்த வல்வினையும்    
போகாதே உன்னை விட்டு    அகப்பேய்!

32. ஈசன் பாசமடி        
இவ்வண்ணங் கண்டதெல்லாம்    அகப்பேய்!
பாசம் பயின்றதடி
பரமது கண்டாயே.    அகப்பேய்!

33. சாத்திர சூத்திரமும்    
சங்கற்பம் ஆனதெல்லாம்    அகப்பேய்!
பார்த்திடல் ஆகாதே    
பாழ் பலங்கண்டாயே.    அகப்பேய்!

34. ஆறு கண்டாயோ    
அந்த வினை தீர;        அகப்பேய்!
தேறித் தெளிவதற்கே    
தீர்த்தமும் ஆடாயே.    அகப்பேய்!

35. எத்தனை காலமுந்தான்     
யோகம் இருந்தாலென்?    அகப்பேய்!
முத்தனு மாவாயோ?    
மோட்சமும் உண்டாமோ?    அகப்பேய்!

36. நாச மாவதற்கே    
நாடாதே சொன்னேனே    அகப்பேய்!
பாசம் போனாலும்    
பசுக்களும் போகாவே    அகப்பேய்!

37. நாணம் ஏதுக்கடி    
நல்வினை தீர்ந்தக்கால்?    அகப்பேய்!
காண வேணு மென்றால்    
காணக் கிடையாதே.    அகப்பேய்!

38. சும்மா இருந்துவிடாய்    
சூத்திரஞ் சொன்னேனே.    அகப்பேய்!
சும்மா இருந்தவிடம்    
சுட்டது காண்டாயே.    அகப்பேய்!

39. உன்றனைக் காணாதே    
ஊனுள் நுழைந்தாயே!    அகப்பேய்!
என்றனைக் காணாதே    
இடத்தில் வந்தாயே!    அகப்பேய்!

40. வானம் ஓடிவரில்    
வந்தும் பிறப்பாயே!    அகப்பேய்!
தேனை உண்ணாமல்    
தெருவோடு அலைந்தாயே.    அகப்பேய்!

41. சைவ மானதடி    
தானாய் நின்றதடி;    அகப்பேய்!
சைவம் இல்லையாகில்    
சலம் வருங் கண்டாயே.    அகப்பேய்!

42. ஆசை அற்றவிடம்    
ஆசாரங் கண்டாயே    அகப்பேய்!
ஈசன் பாசமடி        
எங்ஙனஞ் சென்றாலும்    அகப்பேய்!

43. ஆணவ மூலமடி    
அகாரமாய் வந்ததடி    அகப்பேய்!
கோணும் உகாரமடி    
கூடப் பிறந்ததுவே.    அகப்பேய்!

44. ஒன்றும் இல்லையடி    
உள்ளபடி யாச்சே        அகப்பேய்!
நன்நிலை தீதிலையே    
நாணமும் இல்லையடி    அகப்பேய்!

45. சும்மா இருந்தவிடம்    
சுட்டது சொன்னேனே;    அகப்பேய்!
எம்மாயம் இதறியேன்    
என்னையுங் காணேனே!    அகப்பேய்!

46. கலைகள் ஏதுக்கடி?    
கண்டார் நகையாரோ    அகப்பேய்!
நிலைகள் ஏதுக்கடி?
நீயார் சொல்வாயே.    அகப்பேய்!

47. இந்த அமிர்தமடி
இரவி விடமோடி        அகப்பேய்!
இந்து வெள்ளையடி
இரவி சிவப்பாமே.    அகப்பேய்!

48. ஆணல பெண்ணலவே
அக்கினி கண்டாயே;    அகப்பேய்!
தாணுவும் இப்படியே
சற்குரு கண்டாயே.    அகப்பேய்!

49.என்ன படித்தாலும்    
எம்முறை யாகாதே;    அகப்பேய்!
சொன்னது கேட்டாயே
சும்மா இருந்துவிடு.    அகப்பேய்!

50. காடும் மலையுமடி
கடுந்தவம் ஆனால் என்?    அகப்பேய்!
வீடும் வெளியாமோ?
மெய்யாக வேண்டாவோ?    அகப்பேய்!

51. பரத்தில் சென்றாலும்
பாரிலே மீளுமடி;        அகப்பேய்!
பரத்துக்கு அடுத்த இடம்
பாழது கண்டாயே.    அகப்பேய்!

52. பஞ்ச முகமேது
பஞ்சு படுத்தாலே?    அகப்பேய்!
குஞ்சித பாதமடி
குருபாதங்கண்டாயே.    அகப்பேய்!

53. பங்கம் இல்லையடி
பாதம் இருந்தவிடம்;    அகப்பேய்!
கங்கையில் வந்ததெல்லாம்
கண்டு தெளிவாயே.    அகப்பேய்!

54. தானற நிறைவிடம்
சைவங் கண்டாயே.    அகப்பேய்!
ஊனற நின்றவர்க்கே    
ஊனமொன்று இல்லையடி    அகப்பேய்!

55. சைவம் ஆருக்கடி?    
தன்னை அறிந்தவர்க்கே    அகப்பேய்!
சைவ மானவிடம்    அகப்பேய்!
சற்குரு பாதமடி        அகப்பேய்!

56. பிறவி தீரவென்றால்     
பேதகம் பண்ணாதே    அகப்பேய்!
துறவி யானவர்கள்    
சும்மா இருப்பார்கள்.    அகப்பேய்!

57. ஆரலைந்தாலும்    
நீயலையாதேயடி;    அகப்பேய்!
ஊர லைந்தாலும்        
ஒன்றையும் நாடாதே.    அகப்பேய்!

58. தேனாறு பாயுமடி    
திருவடி கண்டவர்க்கே;    அகப்பேய்!
ஊனாறு மில்லையடி    
ஒன்றையும் நாடாதே    அகப்பேய்!

59.வெள்ளை கறுப்பாமோ?
வெள்ளியுஞ் செம்பாமோ?    அகப்பேய்!
உள்ளது உண்டோடி
உள் ஆணை கண்டாயே;    அகப்பேய்!

60. அறிவுள் மன்னுமடி
ஆதாரம் இல்லையடி    அகப்பேய்!
அறிவு பாசமடி
அருளது கண்டாயே.    அகப்பேய்!

61. வாசியி லேறியபடி    
வான் பொருள் தேடாயோ?    அகப்பேய்!
வாசியில் ஏறினாலும்    
வாராது சொன்னேனே    அகப்பேய்!

62. தூராதி தூரமடி    
தூரமும் இல்லையடி!    அகப்பேய்!
பாராமற் பாரடியோ    
பாழ்வினைத் தீரவென்றால்    அகப்பேய்!

63. உண்டாக்கிக் கொண்டதல்ல    
உள்ளது சொன்னேனே:    அகப்பேய்!
கண்டார்கள் சொல்வாரோ    
கற்பனை அற்றதடி    அகப்பேய்!

64. நாலு மறைகாணா    
நாதனை யார் காண்பார்?    அகப்பேய்!
நாலு மறை முடிவில்    
நற்குரு பாதமடி.        அகப்பேய்!

65. மூலம் இல்லையடி    
முப்பொருள் இல்லையடி;    அகப்பேய்!
மூலம் உண்டானால்    
முத்தியும் உண்டாமே.    அகப்பேய்!

66. இந்திர சாலமடி    
எண்பத் தொருபதமும்    அகப்பேய்!
மந்திரம் அப்படியே    
வாயைத் திறவாதே.    அகப்பேய்!

67. பாழாக வேணுமென்றால்
பார்த்ததை நம்பாதே;    அகப்பேய்!
கேளாமற் சொன்னேனே
கேள்வியும் இல்லையடி.    அகப்பேய்!

68. சாதி பேதமில்லை
தானாகி நின்றவர்க்கே;    அகப்பேய்!
ஓதி உணர்ந்தாலும்    
ஒன்றுந்தான் இல்லையடி    அகப்பேய்!

69. சூழ வானமடி
சுற்றி மரக்காவில்        அகப்பேய்!
வேழம் உண்டகனி
மெய்யது கண்டாயே.    அகப்பேய்!

70. நானும் இல்லையடி     
நாதனும் இல்லையடி;    அகப்பேய்!
தானும் இல்லையடி;    
சற்குரு இல்லையடி.    அகப்பேய்!

71. மந்திரம் இல்லையடி    
வாதனை இல்லையடி;    அகப்பேய்!
தந்திரம் இல்லையடி    
சமயம் அழிந்தததடி.    அகப்பேய்!

72. பூசை பசாசமடி    
போதமே கொட்டமடி!    அகப்பேய்!
ஈசன் மாயையடி        
எல்லாமும் இப்படியே!    அகப்பேய்!

73. சொல்ல லாகாதே    
சொன்னாலுந் தோடமடி    அகப்பேய்!
இல்லை இல்லையடி    
ஏகாந்தங் கண்டாய்.    அகப்பேய்!

74. தத்துவத் தெய்வமடி     
சதாசிவ மானதடி:    அகப்பேய்!
மற்றுள்ள தெய்வமெல்லாம்    
மாயை வடிவாமே.    அகப்பேய்!

75. வார்த்தை அல்லவடி    
வாச மகோசரத்தே    அகப்பேய்!
ஏற்ற தல்லவடி
என்னுடன் வந்ததல்ல    அகப்பேய்!

76. சாத்திரம் இல்லையடி    
சலனங் கடந்ததடி;    அகப்பேய்!
பார்த்திடல் ஆகாதே    
பவானைக் கெட்டாதே.    அகப்பேய்!

77. என்ன படித்தால் என்?
ஏதுதான் செய்தால் என்?    அகப்பேய்!
சொன்ன விதங்களெலாம்
சுட்டது கண்டாயே.    அகப்பேய்!

78.தன்னை அறியவேணும்
சாராமற் சாரவேணும்;    அகப்பேய்!
பின்னை அறிவதெலாம்
பேயறி வாகுமடி        அகப்பேய்!

79. பிச்சை எடுத்தாலும்
பிறவி தொலையாதே;    அகப்பேய்!
இச்சை அற்றவிடம்
எம்இறை கண்டாயே;    அகப்பேய்!

80. கோலம் ஆகாதே    
குதர்க்கம் ஆகாதே:    அகப்பேய்!
சாலம் ஆகாதே        
சஞ்சலம் ஆகாதே    அகப்பேய்!

81. ஒப்பனை அல்லவடி    
உன் ஆணை சொன்னேனே    அகப்பேய்!
அப்புடன் உப்பெனவே    
ஆராய்ந்து இருப்பாயே.    அகப்பேய்!

82. மோட்சம் வேண்டார்கள்    
முத்தியும் வேண்டார்கள்;    அகப்பேய்!    
தீட்சை வேண்டார்கள்    
சின்மய மானவர்கள்.    அகப்பேய்!

83. பாலன் பிசாசமடி    
பார்த்தக்கால் பித்தனடி    அகப்பேய்!
கால மூன்றுமல்ல    
காரியம் அல்லவடி.    அகப்பேய்!

84. கண்டதும் இல்லையடி    
கண்டவர் உண்டானால்    அகப்பேய்!
உண்டது வேண்டடியோ    
உன் ஆணை சொன்னேனே.    அகப்பேய்!

85. அஞ்சையும் உண்ணாதே
ஆசையும் வேண்டாதே;    அகப்பேய்!
நெஞ்சையும் விட்டுவிடு
நிட்டையில் சாராதே.    அகப்பேய்!

86. நாதாந்த உண்மையிலே
நாடாதே சொன்னேனே;    அகப்பேய்!
மீதான சூதானம்
மெய்யென்று நம்பாதே.    அகப்பேய்!

87. ஒன்றோடு ஒன்றுகூடில்
ஒன்றுங் கெடுங்காணே:    அகப்பேய்!
நின்ற பரசிவமும்
நில்லாது கண்டாயே.    அகப்பேய்!

88. தோன்றும் வினைகளெலாம்
சூனியங் கண்டாயே;    அகப்பேய்!
தோன்றாமல் தோன்றிவிடும்
சுத்த வெளிதனிலே    அகப்பேய்!

89. பொய்யென்று சொல்லாதே    
போக்கு வருத்துதானே    அகப்பேய்!
மெய்யென்று சொன்னக்கால்    
வீடு பெறலாமே.        அகப்பேய்!

90. வேதம் ஓதாதே    
மெய் கண்டோம் என்னாதே;    அகப்பேய்!
பாதம் நம்பாதே        
பாவித்துப் பாராதே.    அகப்பேய்!

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar