5. பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ? பரந்தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ? வாளான விழியுடைய பெண்ணைச் சேரும் மயக்கமற்று நிற்பதெப் போ? மனமே ஐயோ! காழான வுலகமத னாசை யெல்லாங் கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற கோளான கருவி விட்டு மேலே நோக்கிக் கூடுவது மேதென்றால் மூலம் பாரே.
6.மூலமதி லாறு தலங் கீழே தள்ளி முதிர்ந்துநின்ற மேலாறு மெடுத்து நோக்கிக் கோலமுட னுன்மனையைத் தாண்டி யேறிக் கொடியதொரு ஞானசக்திக் குள்ளே மைந்தா! பாலமென்ற கேசரியாம் மவுனத் தூன்றிப் பாராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றிக் காலமொடு பிறப்பிறப்புங் கடந்து போகுங் கைவிட்ட சூத்திரம்போல் சடமு மோங்கே.
26. பாங்கான குண்டலிக்குள் மூல மொன்று; பாரப்பா கண்டத்தில் மூல மொன்று போங்கான புருவமைய மூல மொன்று புகழான விந்துவிலே மூல மொன்று வாங்கான சத்தியிலே மூல மொன்று: மருவிநின்ற பராபரத்தில் மூல மொன்று தேங்காம லிவையாறுங் கண்ட ஞானி சேர்ந்துநின்ற மும்மூல யோகி யாமே.
27. ஆமப்பா நகாரமுதல் யகாரம் நிற்கும் அவ்வளவும் யோகத்தின் மூல மாச்சு; தாமப்பா அகாரமுதல் உகாரந் தொட்டுச் சாதகமாய் மகாரவரை ஞான மூலம் ஓமப்பா திசைநாத மவுனத்திற் காணும் உற்றேற வுற்றேற அகண்ட வீதி காமப்பா லுண்டக்கால் யோக சித்தி கடுங்கானற் பாலுண்ட ஞான மாச்சே.