Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மெய்ஞ்ஞான குரு ஞானவான்
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
கொங்கணர் மகத்துவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2015
03:12

40. எறியதோர் கொங்கணரைப் போலே யில்லை
ஏகவெளி தீக்காட்டெப் படியோ போனார்
மாறியதோர் மனம்பிடித்தார் யோகமானார்
மாளுவது நிசமென்று வாய்மை பூண்டார்
கூறினதோ ரறுவரையைக் கண்டு முட்டக்
குமுறியதோர் சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்
ஆறியதோர் மனங்கண்டா ரவரே சித்தர்
ஆச்சரியங் கொங்கணர்போ லார்கா ணேனே.

41. காணரிது காணரிது கோடா கோடி
கண்டுநான் பாபருட்ச சித்தர்க்குள்ளே
பூணரிது பூணரிதே அகண்ட வீதி
புக்கல்லோ சிலம்பொலியைக் கேட்க மாட்டார்
ஊணரிது ஊணரிது வெளியிற் பார்த்து
ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள்
தோணரிது தோணரிதாய் நின்ற ஞானம்
சீடருக்குள் ளோடுறது துரியந் தானே.

சாங்கத்தார்

42. தானென்ற பூரணத்தைச் சாங்கத் தோர்கள்
சகமெல்லாம் நிர்க்குணமாய் நின்ற தென்பார்
வானென்ற வெளியென்பா ரில்லை யென்பார்
வாய்பேசார் சொன்னக்காற் போமோ சொல்லு
கோனென்ற குருவருளால் சமாதி கூட்டிக்
குவிந்துநின்று மவுனத்தின் நிலையைப் பற்றி
ஊனென்ற வுடம்பைவிட்டே அறிவாய் நின்று
உலாவுறதே சாங்கமென்றே யுரைந்த்திட் டாரே.

43. உரைத்திட்ட காரமென்ற பிருதிவி போக்கு
ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து
மறைத்திட்ட மவுனத்துடன் மவுன மூட்டி
மருவியந்த வறிவோடே வாசமாகி
நிறைத்திட்ட அகண்டத்திற் சென்றே ஆடி
நேரான அண்டமுதற் புவனம் பார்த்து
முறைத்திட்டந் தப்பாமற் சமாதி நின்றால்
முழுயோகி முழுஞான முமூட்சா வாயே.

44. ஆமப்பா விதற்கு முன்னப் பியாச மார்க்கம்
அறைகுவே னட்டாங்கம் நன்றாய்க் கேளு:
ஓமப்பா வகையாக விரித்துச் சொல்வேன்
உத்தமனே சாட்சிநித் திரையைப் போக்கு
தாமப்பா சதாநித்தம் தார கத்தே
சார்ந்துநின்ற கேசநிலை சதாநித் தம்பார்
சோமப்பால் கழித்தோடுங் கேசரியைக் கண்டால்
சொல்லாத முத்திரையைச் சொல்லு றேனே.

45. சொல்லுறேன் ரவிமதியும் வன்னி கூடிச்
சொலித்துநின்ற விடமல்லோ கேசரிதா னப்பா
சொல்லுறே னதைப்பார்மனஞ் செயநீ ராகுஞ்
சுத்தவெளி யடியோடே தாக்கி யேத்தும்
சொல்லுறேன் மனம்புத்தி சித்த மென்பார்
தொடர்ந்துநின்ற குருபதத்தைச் சூட்டிக் கேளு
சொல்லுறே னறிந்தமட்டும் புருவ மையம்
சூட்சந்தொட் டேறியட்டாங் கத்துறை கேளே.

46. கேளப்பா ஏமத்தைச் சொலவே நானுங்
கெடியான நேமமூட னாசங் கொண்டு
வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம்
மகத்தான கியானமொடு தாரணை கேளு
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம்
தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய்ப் பாரு
வேளப்பா ஏமமென்ற பத்துஞ் சொல்வேன்
வேதாந்த பொறியறிந்தோர் பெரியோர் தாமே.

47. பெரியோர்கள் ரண்டமென்ற ஆன்மா நோக்கிப்
பேரான பரிச்சின்ன மனமு மாகி
அறியோர்கள் சாதியென்ற ஆச்சிரம் விட்டே
ஆசையென்ற விகற்பமெல்லா மடித்துத் தள்ளிப்
பரியோங்க ளிங்கிசையை நீக்கிப் போட்டுப்
பராபரத்தை நோக்குவதங் கிசம தாகும்
சரியோரா வதுஞ்சகல மதத்தி னாலுந்
தனித்தனியே கண்டிக்கப் படாதென் பாரே.

48. என்பார்க ளிங்கிசையா யிருக்கு மாண்பர்
எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி
அன்பார்க ளிதுவல்லோ சத்தி யந்தான்
ஆரதிக ஆன்மசரீ ராதி சுபாவம்
வன்பார்க ளபகரிப்பை விட்டு விட்டு
மனமுரைத்தா லூரதிக மென்று பேரு
தன்பார்கள் பிறசரீ ராதி சுபாவந்
தானென்ற தற்குலலட் சணந்தான் பாரே.

49. பாரப்பா பிரமமது சுபாவ மாகப்
பரவியது நிரந்தரமுஞ் சரித்தா லன்று
நேரப்பா பிரமசரிய மிதுவாங் கண்டால்
நிரந்தரமுந் தயவினுடை நினைவு கேளு
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கிச்
சகலசனம் நம்மைப்போ லென்றே யெண்ணி
ஆரப்பா சுபானுபவ போதஞ் செய்வார்
அவரல்லோ தயவுடையோ ரறிந்து காணே.

50. காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை
கரைகற்ற சமயம்பொய் யென்று தள்ளி
ஆணப்பா திடப்பட்டாட சேப மென்பார்
வீட்சணமுஞ் சீதளமுஞ் சுகதுக் கத்தால்
வீணப்பா மானாபி மானம் வந்து
வெறும்வெளிபோற் சொப்பனமா மென்று தள்ளித்
தோணப்பா தாங்காம லகண்டத்துள்ளே
சொக்குவது சமயமென்று சொல்ல லாமே.

51. சொல்லலாம் வேதாந்தத் துள்ளே முத்தி
தொடுகுறியாஞ் சாத்திரத்தின் முத்தி யில்லை
வெல்லலா மதனாலே சொன்ன வெல்லாம்
வேறில்லை நாமதுதான் எனலே முத்தி
அல்லெலாஞ் சொப்பனம்போ லவத்தை யாண்டு
அகிலபிர பஞ்சமெல்லா மடுத்து மூழ்கி
நில்லலா மற்புதமாய் நிற்பிட மற்று
நிர்மலமாய் நிற்கிறபூ ரணந்தா னென்னே.

52. தானென்ற பூரணந்தான் நாமென் றெண்ணிச்
சதாநித்தம் மறவாம லிருந்தா னாகில்
வானென்ற கலிதகரி யாச்சு தாச்சு
மருவியதோர் சாத்திரத்தி னாலே யப்பா
கோனென்ற தன்னிடத்தே யொன்றுமில்லை
கூடிநின்று போனதில்லை யென்றே யெண்ணி
வேனென்ற நிர்க்குணமும் வேறொன்றில்லை
வேதாந்தசித் தாந்தமென்றார் கௌச மாச்சே.

53. ஆச்சப்பா நேமத்தைச் சொல்லக் கேளு
அறைகுவேன் நன்றாகப் பூர ணந்தான்
வாச்சப்பா சத்யமென்ன மித்தையென்ன
மருவியதோர் நானேதான் என்ற தாரு
வீச்சப்பா நமக்குவந்த பந்த மேது
வேதாந்த சாத்திரத்தால் விளங்கப் பார்த்துக்
கூச்சப்பா திடப்பட்டார் தவசென் பார்கள்
குலாமரிட்ட விடவெல்லாங் குருட்டு நோக்கே.

54. நோக்கப்பா பிரமமதி லோகத் துள்ளே
நுகர்ந்துநின்ற காமியத்தை நரகென றெண்ணி
வாக்கான வெறுப்பதுசொப் பனம்போ லெண்ணி
மசகமிது வென்றதள்ளி மனமீ தேறித்
தாக்கான பொருளல்லோ சச்சிதா னந்தம்
தடைபெறவே தானானார் சந்தோட மாச்சு
போக்கான வேதாந்தப் பிரம சாரம்
புகட்டுகிற குருச்சொல்பூ ரணமென் றெண்ணே.

55. எண்ணியதோர் மூன்றையுந்தா ணுண்மை யென்ரே
எண்ணியிருக் கிறதாரென் றியம்பு வார்கள்
தண்ணியதோர் குருவுரைத்த வுபதே சத்தைத்
தானறிந்து பூரணமாய் முத்த னாகிப்
பண்ணியதோ ரபராதம் குருவுக் கீந்து
பராபரத்தைத் தன்தேகம் போல யெண்ணி
அண்ணியதோர் சுகமுடனே துக்க மெல்லாம்
ஆர்செய்துந் தனக்குவரம் போலுங் காணே.

56. காணப்பா விப்படியே தீர்த்தி யானால்
கைகடந்த சிவபூசையென்று சொல்வார்
வீணப்பா சகலநூலென்று தள்ளி
விரைந்து நின்ற விரத்தியெல்லாம் விட்டே யோடி
ஊனப்பா குருபிறகே நிழலைப் போலே
உத்தமனே சச்சிதா னந்த னானாய்
ஆணப்பா தேவிக்குப சரித்து வென்று
அறிகிறதே சிரவணமென் றறிந்து கொள்ளே.

57. அறிந்திந்த வேதநிலை விட்டு நீயும்
அப்பனே வாசனைப்ர பஞ்சந் தாண்டி
மறிந்திந்த புத்ராதி பாசக் தாலே
மாயம்வந்து முட்டையிலே கலச்சை யாக்கிச்
செறிந்தவதை யடிச்சகவே தாந்தம் பார்த்துச்
சீராக நிற்கிறதே செம்மை யாகும்
நெறிந்து நின்ற வேதாந்தப் பிரமந் தன்னில்
நினைவோடு வருகிறதே யாசை தானே.

58. ஆசையென்றும் மதியென்றும் அதற் குநாமம்
அப்பனே தாம்பிரம மென்றே ஆசான்
நேசையென்ற வுபதேசப் படியே யென்றும்
நேராக வேதாந்தப் பொருளென் றெண்ணிப்
பூசையென்று மற்றதெல்லாந் தள்ளி விட்டால்
உத்தமனே சிவமென்று சொல்லு வார்கள்
காசையென்றே என்னென்ன கார்யம் வந்துங்
கைவிட்ட துக்கம் வந்துங் கலங்கி டாரே.

59. கலங்காமல் நாப்பிரம மென்றே யெண்ணிக்
கவடற்று நிரந்தரம்வே தாந்தம் பார்த்தே
மலங்காமல் நிற்கிறதே விரத மப்பா
மகத்தான நேமமென்ற பத்து மாச்சே
இலங்காம லிருபதையும் மனுட்டித் தாக்கல்
என்மகனே மனந்திடமா யீல்லா விட்டால்
துலங்காத சுவரில்சித்திரம்போ லாகும்
சுழியதுதா னடிப்படைமூன் றொன்றும் வாறே.

60. வாறாகச் சுகாசனமா யிருந்து கொண்டு
மருவியதோர் மூலத்தில்வங் கென்று பூரி
கூறாகக் கும்பித்துமாத் திரையை யேற்றிக்
குறியோடே சிகாரத்தால் ரேசி ரேசி
சாறாக விப்படியங் கென்று கும்பி
சாதகமா யிவைமூன்று தீர்ந்த பின்பே
ஆறாக அகாரமுத லுகாரங் காட்டி
அப்பனே மவுனத்தாற் கும்பித் தேறே

61. கும்பித்து மௌனந்தான் குவிந்த பின்பு
கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயுந்
தம்பித்துக் கண்டத்தே நின்றே யூது
தாலடங்கி யுரைத்தபின்மேல் மூலம் நின்று
சொம்பித்தே யறிவோடே மௌனம் பூரி
சுகமாகப் பூரணத்தை யதற்குட் கும்பி
தம்பித்து மனத்தொடு ரேசகத்தைப் பண்ணு
தலமான பிரமமென்று பிராண னாச்சே.

62. ஆச்சப்பா இதுவல்லோ பிராணா யாமம்?
அறிந்தவனார் சிவயோகி யறியார் மற்றோர்
ஓச்சப்பா பிரபஞ்ச வாசை விட்டே
ஒன்றையுந்தான் மனத்தினுள்ளே சங்கி யாமல்
வாச்சப்பா வந்ததென்ற காரண மாக
மருவியதோர் ஞான மென்ற மார்க்கத் தூடிக்
கூச்சப்பா காமியத்தை நரகென் றெண்ணக்
கூறான கர்மமெல்லாம் விடுக்க நன்றே.

63. நன்றாக வேதாந்த சாத்தி ரத்தால்
நாம் சாட்சி யென்று நித்த முரைத்து நின்று
பன்றான மற்றவைநாம் அல்ல வென்று
பரவிநின்றே யுலகமெல்லாம் மித்தை யென்று
கன்றாக வுரைப்புநிரந்த தரமு நினைவாய்க்
காரணகா ரியங்களெல்லாந் தவிர்ந்து போட்டு
ஒன்றான வொரு பொருளாய் நின்றா யானால்
உத்தமனே பிரத்தியா கார மாச்சே.

64. ஆச்சப்பா மாயையொடு மாய வின்பம்
அப்பனே சுத்த சைதன்ய மூன்றும்
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும்
ஓடியெங்கும் மறைந்திருக்குங் கண்டாலுந்தான்
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தி
யாகநனி தோத்திரமாய்த் தியானம் பண்ண
வீச்சப்பா பிரமமென்றே தியான மாச்சு
விளம்புகிறேன் ஐந்து வகைச் சமாதி தானே.

65. தானென்ற அதிட்டான சைதன் யுத்தைத்
தனையளித்து நிலவறையில் தீபம் போல
ஆனென்ற அலைவற்றுத் திடம தாக
அப்பனே அகண்டமது தானாய் நின்று
வேனென்ற தோற்றமற்றே யிருந்தா யானால்
விளங்கியதோர் தத்வலயச் சமாதி யாச்சு
வானென்ற சவ்வி கற்பச் சமாதி கேளு
மருவியதோர் தத்வலயச் சமாதிக் குள்ளே.

66. உள்ளாக இருக்கையிலே பேசுஞ் சுற்றம்
உறவாகக் கேட்டாக்காந் தாணு வித்தை
தள்ளாகச் சவ்விகற்பச் சமாதி யென்று
தாமுரையார் பெரியோர்கள் கேளு கேளு
விள்ளாகத் திரிசாணு வித்தை மார்க்கம்
விரவியந்தச் சமாதியிலே நிற்கும் போது
தள்ளாகத் தன்னையனு சந்தா னித்துத்
தலமான சந்தானந் திரிசான மாச்சே.

67. ஆச்சப்பா இதன் போசவ் விகற்ப மென்பார்
அருளியதோர் நிருவிகற்பச் சாதி கேளு!
ஒச்சப்பா தத்வலயச் சமாதி முத்தி
உத்தமனே சாத்தனுத்தங் கேம றந்து
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல
ஆச்சரியஞ் சத்தமெல்லாங் கேளா விட்டால்
கூச்சப்பா சித்தமது சொரூபத் துள்ளே
கொண்டாற்பூ ரணத்தில்நிரு விகற்ப மாமே.

68. ஆமப்பா சமாதிவிட்டுச் சரிக்கும் போதும்
அப்பனே சாத்திரங்கள் பார்க்கும் போதும்
ஓமப்பா காலமென்ற நிறையு மில்லை
உத்தமனே பிரபஞ்சமில்லை யென்று
சோமப்பா விகாரந்தோற் றும்ப்ர பஞ்சஞ்
சொப்பனம்போல் பாசமென்ற மதிய டக்கில்
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும்
அகத்தான காரணனா மென்றே யெண்ணே

69. எண்ணியல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி
ஏக்கமாய் நிருவிகற்ப மாகி நின்றே
அண்ணியல்லோ பிரபஞ்ச விகற்பந் தள்ளி
அனுபோக நிருவிகற்பச் சமாதி யாச்சே
ஒண்ணியல்லோ சொரூபத்திற் லயிச்சு நின்றே
உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபந்
தண்ணியல்லோ வுப்புண்டாற் போலே மைந்தா
சாதகமா யுன்னுருவங் கெட்டுப் போச்சே.

70. போச்சதுவுங் கடிகையொன்று தானாய் நின்றாற்
புகழான பெருமை சொல்ல வென்றாற் கூடா
ஆச்சதுவு மவுனமுற்று வாயை மூடி
ஆசையற்றே இருந்தல்லோ அகண்ட வீதி
வாச்சதும்ப்ர பஞ்சத்திற் கண்ட தெல்லாம்
வாலையு னுரைபோலும் மலைபோற் காணும்
கோச்சதுவுஞ் சிலந்தியுடை நூலும் போலக்
கூறுமத னங்கம்போற் குறியைக் காணே.

71. குறியான விண்ணுதித்த மேகம் போலுங்
கோதியதோர் சொப்பனப்ர பஞ்சம் போலும்
நெறியான அகண்டம் நம் மிடத்தே மைந்தா!
நேராகவுண்டாகில் இற்றுப் போச்சு
பறியான வெவ்வேறு நாம மாகிப்
பாழுலகு நம்மிடத்தே தோன்றுந் தோன்றும்
மறியாக வழிந்துபோம் நாமே பிரமம்
மற்றொன்று மில்லையென்று மயக்கந் தீரே

72. மயக்கமற்று நானொருவ னெனக்கு ளெல்லாம்
மற்றொன்று மில்லையென்று தீரனாகித்
தியக்கமற்றெந் நேரமுமுள் ளிட்டுக் கொண்டு
சேர்ந்துவருஞ் சந்தோடந் துக்கந் தள்ளி
முயக்கமற வருட்பெய்து முன்னே வந்து
முன்னின்று விகற்பங்கள் பண்ணினாலும்
அயக்கமற்று மனதிடமாய்ச் சதமாய்த் தள்ளி
ஆராதி கொண்டகறித் தானாய் நில்லே.

73. நில்லப்பா சஞ்சாரத் தாலத் துள்ளும்
நேராகச் சமாதியிலே யிருக்கும் போதே
அல்லப்பா தொய்தம்வந்தா லாதரவு பண்ணி
அசையாத மலைபோல விருக்க நன்று
சொல்லப்பா கற்பமது கண்டத் தெய்துஞ்
சுட்டிநின்று திடப்படுதல் மெத்த நன்று
வெல்லப்பா வாசனையை விண்டா யானால்
மேவியதோ ராரூடச் சமாதி யாச்சே.

மாயையுத்தி

74. ஆச்சப்பா மாயைபுத்தி சொல்லவென்றால்
அனேகமுண்டு சூட்சுமமாய்ச் சொல்லக் கேளு:
வாச்சப்பா தேசத்திற் பேதா பேதம்
மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம்
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம்
ஓகோகோ சனங்களிலே யனேக பேதம்
வீச்சப்பா புத்திகளிற் பேதா பேதம்
வெகுமோக மாயத்தாற் றோன்றுங் காணே.

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar